தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரீனா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறி உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் ராபர்ட் மாஸ்டர், அசிம், நிவாசினி, கதிர், ஜனனி இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் 37-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வார லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் இரண்டு இரண்டு நபர்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் ரோஸ்ட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு 400 லக்ஜூரி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஜனனி மற்றும் ராபர்ட் ரோஸ்ட் செய்யும் போது ராபர்ட்டை பார்த்து ஜனனி எல்லோரையும் டார்லிங் டார்லிங்குனு கூப்டுறீங்க நீங்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீங்களா அல்லது சுற்றுலா தளத்திற்கு வந்தீங்களா என்று நச்சுனு கேள்வி கேட்டிருப்பது போல் வீடியோ வெளியாகியுள்ளது.
#Day37 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/FBL9qEC2WW
— Vijay Television (@vijaytelevision) November 15, 2022