Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.. வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த வனிதா.. வெளியான பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ

BB Ultimate Day24 Promo Update

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவிக்கு பதிலாக இந்த நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் பங்கேற்றுள்ளார். ஆரம்பம் முதலே இவருக்கு சக போட்டியாளர் களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன் என பிக் பாஸ் சீசன் கதறி அழுதார். அதன் பின்னர் அவருக்கு பிக்பாஸ் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிக்பாஸ் இடம் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் இனி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதனால் வனிதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.