Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளித்திரையில் entry கொடுக்கும் பிக் பாஸ் தாமரைச்செல்வி.. வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து

bb thamarai-selvi-in-1st-movie update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து கலைஞராக அறியப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் தன்னுடைய கணவருடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் தற்போது தாமரைச்செல்விக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் சிங்கம்புலி மற்றும் ரோபோ சங்கர் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து போட்டோக்களை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.