தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஓவியா. களவாணி என்ற படத்தில் மூலம் அனைவருக்கும் பிடித்த நடிகையாக மாறிய இவர் தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார். அதற்குப் பின் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்ததால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 1’ இல் களம் இறங்கி அனைத்து தமிழக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
இவருக்கென்று ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று தனி குரூப்பையே இணையதளத்தில் ஆரம்பித்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓவியா ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற நடன நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா ஆகியோருடன் ஓவியாவும் நடுவராக இருக்கப் போகிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
