தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
சிம்பு தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களான பாலாஜி முருகதாஸ் மற்றும் நிரூப் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இறுதியில் பாலாஜி முருகதாஸ் முதலிடத்தையும் நிரூப் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வென்ற பாலாஜிக்கு வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நிரூப். பிக்பாஸ் டைட்டிலை என்ற பாலாஜிக்கு வாழ்த்துக்கள் என்பது சொல்வதற்கு பதிலாக டைட்டிலை க்ரைம் செய்த பாலாஜிக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
இதற்கு பாலாஜி அது கிளைம் இல்ல வெற்றி டா என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை பற்றி பதிவு செய்துள்ள பதிவில் நிரூப் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தன்னால் டைட்டிலை வெல்ல முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதை இரண்டையும் ஒப்பிட்டு ரசிகர்கள் நீங்கள் ஜெயித்தால் வெற்றி மற்றவர்கள் செய்தால் அது க்ளைமா?? என விமர்சனம் செய்து வருகின்றனர்.
Congratulations @OfficialBalaji on claiming the BBU trophy.#BiggBossUltimate #BalajiMurugadoss #NiroopNandakumar
— Niroop Nandakumar (@NiroopNK) April 11, 2022
Congratulations @OfficialBalaji on claiming the BBU trophy.#BiggBossUltimate #BalajiMurugadoss #NiroopNandakumar
— Niroop Nandakumar (@NiroopNK) April 11, 2022

