Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதன்முறையாக தன் திருமண வாழ்க்கை குறித்து பேசிய இசைவாணி.. கணவரை விட்டு பிரிந்ததற்கு காரணம் இதுதான்

BB isai-vani-about-marriage-life

தமிழ் சினிமாவில் கானா பாடல்களை பாடி பிரபலமானவர் இசைவாணி. உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் நடனம் ஆடினார். பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய ஏழ்மை நிலை, குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசிய இசைவாணி தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி வாய் திறக்கவே இல்லை.

இந்த நிலையில் தற்போது அவர் முதல் முறையாக தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் எங்களுடைய திருமணம். பிறந்த வீட்டிலிருந்து சுதந்திரம் கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. கானா பாடல்கள் பாடுவதற்கு அனுமதி கொடுக்கவில்லை ஆகையால் அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டது எனக்கும் அந்த குடும்பத்திற்கும் இப்போது எந்த வித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 BB isai-vani-about-marriage-life

BB isai-vani-about-marriage-life