பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன.
பார்லி தானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சரிசமமாக காக்கப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.
பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது.
பார்லி தானியங்களை சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைகிறது.
பித்தப்பை கற்கள் நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1