Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

பனாரஸ் திரை விமர்சனம்

Banaras movie review

மர்சனம் கதாநாயகன் ஜையீத்கான் பணக்கார வீட்டு பிள்ளை. இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கதாநாயகி சோனல் முன்பு திடீரென வந்து நான் தான் உன் கணவர் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். நமக்கு ஒரு மகள் இருக்கிறாள் இதை யாரிடமும் சொல்லாதே என்று பொய் சொல்கிறார். இதை நம்பும் சோனல், ஜையீத்கானை தன் அறையில் தங்க இடம் தருகிறாள். அப்போது ஜையீத்கான், சோனலுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புகிறார்.

இந்த செல்பி வைரலானதால் சோனல் அவமானத்தில் காணாமல் போகிறார். இவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக ஜையீத்கான் அலைகிறார். இறுதியில் சோனலிடம் ஜையீத்கான் மன்னிப்பு கேட்டாரா? அதனை சோனல் ஏற்றுக் கொண்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை. அறிமுக நடிகரான ஜையீத் கான் தனது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். காதல், எமோஷனல் காட்சிகளில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பை கொடுத்து கைத்தட்டல் பெற்றுள்ளார். கதாநாயகியான சோனலின் ஆதரவற்ற காட்சிகள் அவர் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுகிறது. தன் கதாபாத்திரத்தை முழுமையாக கொடுத்து ரசிக்கும்படி செய்துள்ளார்.

இயக்குனர் ஜெயதீர்த்தா காதலையும் அறிவியலையும் கலந்து ஒரு சையின்ஸ் லவ் படமாக கொடுத்திருக்கிறார். காதலுக்காக இவர் பயன்படுத்தியுள்ள டைம்லூப் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு காசியில் நாமும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் ‘பனாரஸ்’ – காதல் ஓவியம்

 Banaras movie review

Banaras movie review