எலும்பு பலமாக இருக்க வாழைப்பழம் பெரும் அளவில் உதவுகிறது.
பொதுவாகவே அனைவரும் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏனெனில் அதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கம் சீராக இயங்க உதவும். வாழைப்பழம் சாப்பிடும் போது நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் பி6 பொட்டாசியம் இரும்புச்சத்து மெக்னீசியம் சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் வாழைப்பழம் ஒரு மருந்தாகவே பயன்படுத்துவார்கள்.
பொதுவாகவே எலும்புகளுக்கு அதிகமாக பொட்டாசியம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வோம். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் கால்சியம் சத்தை அதிகரித்து எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது.
இதுபோன்று வாழைப்பழத்தில் இருக்கும் அற்புத பயன்களை அறிந்து உங்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.