தமிழ் திரையுலகில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது இளைஞர்கள் ரசிக்கும் நடிகையாக வளம் வருபவர் யாஷிகா ஆனந்த்.
இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவரை, குடி போதையில் காரை விட்டு மோதியதாக செய்திகள் வெளியானது.
மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும்விபத்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த செய்தியை மறுத்த நடிகை யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும் என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் நானே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றேன் என கூறினார்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து சில அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை சமீபத்தில் ஜோ மைக்கில் என்பவர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜோ மைக்கில் கூறியது :
அக்டோபர் மாதம், 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உணவு டெலிவரி செய்யும் பரத் என்பவரை, குடி போதையில் காரை விட்டு மோதியதாக யாஷிகாவின் நண்பர்கள் தான், மேலும் அந்த காரை ஓட்டி சென்றது அவரின் நண்பரும் பிக்பாஸ் 4 போட்டியாளருமான பாலாஜி முருகதாஸ் என கூறியுள்ளார்.
இந்த விபத்து குறித்து நான் யாசிக்கவை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தேன். ஆனால் என்னால் இயலவில்லை. அவரின் நண்பரிடம் தான் என்னால் பேச முடிந்தது.
யாஷிகாவின் நண்பர் கூறியது :
அப்போது அவர் என்னிடம் சொன்னது யாஷிகா அந்த காரில் இல்லை, நான் வந்த விஷயத்தை முடித்துவிட்டு நாங்கள் தனியாக போய்விட்டோம். எங்கள் கூட வந்த பாலாஜியும் அவரது நண்பரும் வந்த வேறு காரில் போய் மோதி விட்டார்கள்.
அப்போது பாலாஜி எங்களுக்கு கால் செய்து நாங்கள் விபத்து ஒன்றை செய்துவிட்டோம். எங்களுக்கு உதவி வேண்டும் என்று அழைக்கும் போது தான் நாங்கள் அங்கே சென்றோம். ஆனால் அங்கே இருந்த மீடியாகள் எங்களை பார்த்ததும் நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக நினைத்து விட்டார்கள் என்று என்னிடம் கூறியதாக ஜோ மைக்கேல் கூறியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…