Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம். எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்

bagavanth-kesari-clash-with-leo movie

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், அர்ஜூன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள பகவந்கேசரி திரைப்படம் இதே தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் தெலுங்கில் லியோ மற்றும் பகவந் கேசரி படத்திற்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bagavanth-kesari-clash-with-leo movie
bagavanth-kesari-clash-with-leo movie