Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெனி கேட்ட கேள்வி, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLkashmi Serial Episode Update 17-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க ஜெனி பரிமாறுகிறார்.கோபி பிரெட்டும் ஜாம் சாப்பிட ஈஸ்வரி இது உனக்கு போதுமடா என்று கேட்க இன்னும் நிறைய இருக்கும்மா என்று சொல்லுகிறார். ஓட்ஸ் செஞ்சி தரேன் என்று தான் சொன்னேன் அவர்தான் வேணாம்னு சொன்னாரு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அதுக்கு இதுவே மேல் என்று நினைத்திருப்பான் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கின்றன அந்த நேரம் பார்த்து பாக்யா வர என்ன ஆச்சு என்று கேட்கின்றனர் ராஜசேகர் சார் அவங்க ஆபீஸ் அனிவர்சரி வர்றதுனால 500 பேருக்கு கிராமத்து முறையில் சாப்பாடு கேட்டு இருக்காரு என்று சொல்ல ஆனால் இப்போது என்னிடம் ரொம்ப கடன் அதிகமா இருக்கு ஆளு கூட இல்ல என்ன பண்றதுன்னு தெரியல என்று சொல்லுகிறார்.

உடனே ஈஸ்வரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே என்று சொல்ல அதற்கு செல்வி பண்ண முடியுமான்னு கேட்க அவரு கூப்பிடல பண்ணி கொடுங்கன்னு சொல்றதுக்காக அவரை கூப்பிட்டு இருக்காரு என்று சொல்ல பிசினஸ் எல்லாம் கஷ்டம் இருக்கத்தான் செய்யும் நீ சொல்லிட்டு வர வேண்டியதுதானே என்று ஈஸ்வரி சொல்ல உடனே ராதிகா உங்களுக்கு என்ன பணம் தானே பிரச்சனை நான் உங்களுக்குத் தர கடனா கூட வாங்கிட்டு உங்களுக்கு எப்ப கொடுக்கணும்னு இருக்கோ அப்ப குடுங்க என்று சொல்லுகிறார். ஆனால் பாக்யா வாங்க மறுக்கிறார். உடனே கோபி எங்க கிச்சன்ல இருந்து செஃப் இருக்காங்க அவங்க கிட்ட சொல்றேன் அவங்க சூப்பரா சமைப்பாங்க என்று சொல்ல பாக்யா வேண்டாம் என்று சொல்லுகிறார். என்னால் தானே இவ்வளவு பிரச்சனை வந்தது நானே சரி பண்றேன் என்று சொல்லுகிறார். இப்போதைக்கு எந்த ஹெல்ப்பும் வேணாம் நீங்க ரெண்டு பேரும் கேட்டது எனக்கு சந்தோஷம் ஏதாவது தேவைப்பட்டால் சொல்றேன் என்று சொல்லுகிறார் பாக்யா.

மறுபக்கம் ஜெனியும் பாக்யாவும் பேசிக்கொண்டிருக்க என்ன ஆண்ட்டி பண்ணப் போறீங்க என்னோட ஜுவல்ஸ் இருக்கு நீங்க அத வச்சு ஏதாவது பண்ணிக்கோங்க என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் ஜெனி நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். உடனே எழில் வர நான் சொன்னது பத்தி என்னடா முடிவு பண்ணி வச்சிருக்க என்று கேட்க நீ அப்பா கிட்ட உதவி கேட்கிறதுல எந்த தப்பும் இல்லை என்று தான் எனக்கு தோணுது. இது அவரால வந்த பிரச்சனைதான் உன்ன கல்யாணம் பண்ண அப்போதான் எந்த உதவியும் அவரு பண்ணல இப்பவாவது பண்ணட்டும் ஏத்துக்கோ என்று சொல்ல பாக்யாவும் யோசிக்கிறார் ஜெனியும் எழில் சொல்றதும் சரிதான் என்று சொல்ல, அனைவரும் கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியா கோபியிடம் பேசினாரா? அதற்கு கோபி பதில் என்ன? ராதிகா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLkashmi Serial Episode Update 17-01-25