கோபிக்கு காபி எடுத்து கொண்டு போன இனியா. தட்டி விட்ட ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தூக்கத்திலிருந்து எழுந்த ராதிகா நைட் எல்லாம் சரியா தூங்கவே இல்ல அதனால தான் லேட் ஆயிடுச்சு என கோபி கிட்ட சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி பாக்கியாவிடம் கொஞ்சம் காபி போட்டு கொடுக்கிறியா என கேட்க அவர் இப்பதான் குடிச்சீங்க யாருக்கு அத்தை என கேட்கிறார். உடனே ஈஸ்வரி கோபி காபி எடுத்துட்டு குடிக்காமல் போனது மனசுக்கு கஷ்டமா இருக்கு என சொல்லி போட்டுக் கொடுக்க சொல்ல பாக்கியா காபி மட்டும் போட்டு கொடுத்தா போதுமா இல்ல எடுத்துட்டு போய் கொடுக்கணுமா என கேட்க ஈஸ்வரி காபி மட்டும் போட்டு கொடு போதும் என சொல்கிறார்.

ஆனால் பாக்யா முடியாது அத்தை உங்களுக்காக ஏதாவது செய்யணுமா செய்யுறேன் இல்ல இந்த வீட்ல இருக்க மத்தவங்களுக்காக ஏதாவது செய்ய சொல்றீங்களா செய்யறேன் ஆனா அவங்களுக்காக எதுவும் செய்ய முடியாது. இதுவரைக்கும் செய்ததெல்லாம் போதும் என கூறுகிறார். பிறகு ஈஸ்வரி செல்வியிடம் கேட்க நான் வேலையை விட்டு கூட போவேன் ஆனால் அவருக்காக எந்த வேலையும் செய்யமாட்டேன் என ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு ஜெனியிடம் கேட்க ஜெனி நான் போட்ட காப்பிய என்னாலயே குடிக்க முடியாது என சொல்கிறார். அடுத்து இனியாவிடம் கேட்க பாட்டி எனக்கு காபி போட்டு கொடுத்தா குடிக்க தெரியும் காபி போடத் தெரியாது என சொல்லி விடுகிறார். இதனால் ஈஸ்வரி தானாகவே சென்று காபி போட்டு இனியாவிடம் கொடுத்து கோபிக்கு கொடுக்க சொல்கிறார்.

இனியா காப்பியை எடுத்து வந்து ரூமின் கதவை தட்ட கதவை திறக்கும் ராதிகா காபியா என வாங்க போக உங்களுக்கு இல்ல டாடிக்கு என சொல்லி எடுத்து வந்து கோபி கையில் கொடுத்துவிட்டு ஸ்கூலுக்கு டைம் ஆகுது என இனியா கிளம்பி விடுகிறார்.

பிறகு கோபி ரசித்து ருசித்து காப்பியை குடிக்க போக ராதிகா அதை தட்டி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். இங்க ரெண்டு பேரு இருக்கோம். உங்களுக்கு மட்டும் காபி கொடுத்தால் என்ன அர்த்தம்? போட்டுக் கொடுத்தவர்களுக்கு அறிவில்லையா இல்ல என்ன விட்டுட்டு குடிக்க போற உங்களுக்கு அறிவில்லையா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு நான் உங்களுக்கு காபி போட்டு வரேன் என சொல்லி கீழே வரும் ராதிகா காப்பி போட பால் எடுக்க ஈஸ்வரி அது எங்க வீட்டுப் பொருள், கண்டவங்க காபி போட்டு குடிக்க கிடையாது என சொல்ல ராதிகா பால் பாக்கெட் வைத்துவிட்டு வெறும் பிளாக் காபி போட்டு எடுத்துச் சென்று கொடுக்கிறார்.

கோபி குடிக்க தயங்கிக் கொண்டிருக்க முதலில் குடிக்கும் ராதிகா ரொம்ப கசக்குது என எடுத்து போய் ஊற்றி விடுகிறார். கோபியும் கீழே ஊற்ற போக சத்தம் போடும் ராதிகா உங்களுக்காக ஆசையா போட்டு வந்தேன் குடிங்க என சொல்லி குடிக்க வைக்கிறார்.

இதனால் வேறு வழி இல்லாமல் அந்த காபியை குடிக்கும் கோபி பிறகு பாத்ரூமுக்குள் சென்று வாந்தி எடுத்து வாழ்க்கையில் தான் ஸ்வீட் இல்ல, காபில கூடவா ஸ்வீட் இருக்கக் கூடாது என புலம்ப ராதிகா என்ன பண்றீங்க என சத்தம் போட நிம்மதியா புலம்ப கூட விட மாட்றா என தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshmi-today-episode-update
jothika lakshu

Recent Posts

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

7 hours ago

வேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் செய்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் சரண்யா..!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…

7 hours ago

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

14 hours ago

மீனாவுக்கு வந்த புது ஐடியா, ரோகினியை திட்டும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

14 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

16 hours ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

17 hours ago