Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உண்மை தெரிந்த பாக்யா எடுக்கப் போகும் முடிவு என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்

baakiyalakshmi serial-upcoming-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. நேற்றைய எபிசோடு மருத்துவமனையில் பாக்யாவும் ராதிகாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினர். பாக்கியாவுக்கு எப்போது உண்மை தெரியும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த சம்பவம் விரைவில் நடக்க உள்ளது.

இது குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோ வீடியோவில் மனைவி வாங்க என சொல்ல ராதிகா எழுந்து வருகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியாக பாக்கியா. பிறகு கோபி ராதிகாவின் கையை பிடித்து என்னை விட்டுப் போய்டாத, நீ இல்லனா நான் செத்து விடுவேன் என சொல்ல இதைக் கேட்டு பாக்கியா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது குறித்து எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

கோபியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என பாக்யா அவரை விட்டுக் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

baakiyalakshmi serial-upcoming-episode-update
baakiyalakshmi serial-upcoming-episode-update