Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்னிக் சென்ற இடத்தில் எழிலிடம் வசமாக சிக்கிய கோபி.. வெளியான புரோமோ விடியோ.!

Baakiyalakshmi Serial Upcoming Episode Promo

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பத்தோடு பிக்னிக் செல்ல திட்டம் போட்டு அனைவரும் கிளம்பி சென்றுள்ளனர். ஆனால் கோபி மயூ மற்றும் ராதிகாவுக்கு கொடுத்த வாக்கை அவர்களுடன் சேர்ந்து பிக்னிக் சென்றுள்ளார். இவை அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளன.

ஒரு தீம் பார்க்கில் ஆளுக்கு ஒருபுறமாக சுற்றித் திரிந்து வந்த நிலையில் இனியா எழிலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கோபிக்கு அனுப்ப அதனைப் பார்த்த கோபி இதே இடம் போல தெரிகிறது என பதறி போன பக்கத்தில் வேறு ஒரு தீம் பார்க் தந்திருக்காங்க, அங்க போகலாம் என சொல்லிவிட்டு ராதிகா மற்றும் மயூவை கூட்டி கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

கோபி கார் அருகே நின்று கொண்டிருந்ததை எழில் பார்த்துவிட அப்பா என செல்கிறார். ஆனால் அதற்குள் கோபி காரில் வேகமாக சென்று விடுகிறார். இந்த காட்சிகள் நாளைய எபிசோட்டில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் யூட்யூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

 Baakiyalakshmi Serial Upcoming Episode Promo

Baakiyalakshmi Serial Upcoming Episode Promo