baakiyalakshmi-serial-today-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கிச்சனில் பாக்கியா ஏதோ ஒரு யோசனையில் இருக்க கேண்டினில் உடன் சேர்ந்து சமைத்தவர்கள் எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர்.
பிறகு பாக்கியா கையில் இருக்கும் பணத்தை செல்விக்கு கொடுக்கிறார். அதோடு இல்லாமல் அமிர்தா செய்த வேலைக்காகவும் பணத்தை கொடுக்கிறார். பிறகு எழிலியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்க அமிர்தா என்னையும் ஒரு வேலை செய்யற பெண்ணா தான் பார்த்தீர்களா என்று கேட்க அப்படி இல்ல நான் செஞ்ச வேலைக்கு நான் பணம் எடுத்துக்கிற மாதிரி நீ செஞ்சு வேலைக்கு உனக்கும் பணம் கொடுக்கணும் இல்ல என்று சொல்லி கொடுக்கிறார்.
அதன் பிறகு கோபி ஆபீசிலிருந்து வீட்டுக்கு வர பாக்கியா எல்லாரையும் கூப்பிட்டு வைத்து எழில் அமிர்தா பற்றி பேச முடியவில்லை கடைசி நிமிடத்தில் போஸ்ட் மேன் வந்து செழியனுக்கு கோர்ட்டில் இருந்து லெட்டர் வந்திருப்பதாக சொல்லி கொடுக்க அதைப் பிரித்து பார்க்கும் செழியன் ஜெனியிடமிருந்து வந்த விவாகரத்து பேப்பர் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
செழியன் கலங்கி உடைந்து உட்கார இதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனிமே என்னுடைய வாழ்க்கை அவ்வளவுதானா ஜெனியை பார்க்கவே முடியாத என் குழந்தையோட சேர்ந்து இருக்கவே முடியாதா என கலங்கியவாறு ரூமுக்குள் ஓடிச்சென்று விட ராதிகா மற்றும் கோபி இருவரும் சென்று செழியனை ஆறுதல் படுத்துகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…