sirakadikka-aasai serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா, மீனா ஒன்னும் இல்ல அவங்க அப்பா உயிரோட இருந்திருந்தா இன்னும் அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்குமா என்று கூட தெரியாது என்று பேச கண் கலங்கி ரூமுக்கு சென்று விடுகிறார்.
பிறகு பூஜை அறையில் உட்கார்ந்து மனம் வருந்தி கொண்டிருக்க அங்கு வரும் விஜயா இங்க உக்கார்ந்துட்டு என்ன பண்ணிட்டு இருக்க வேலையெல்லாம் போட்டது போட்ட மாதிரியே இருக்கு என்று சத்தம் போட இங்க வேலை செய்வதற்கு மட்டும்தான் நான் இருக்கேனா என்று எதிர்த்து கேள்வி கேட்கிறார் மீனா.
திரும்பத் திரும்ப அவருடைய அப்பாவை பற்றி தப்பாக பேச மீனா அத்தை போதும் நிறுத்துங்க என்று சத்தம் போட வீட்டில் உள்ள எல்லோரும் கூடி விடுகின்றனர். ரோகிணி என்ன மீனா ஆன்ட்டி கிட்ட இப்படி பேசிட்டு இருக்கீங்க என்று கேள்வி கேட்க நான் அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் வேற யாரும் குறுக்க வராதீங்க என ரோகிணிக்கும் பதிலடி கொடுக்கிறார்.
அண்ணாமலை வெளியே வந்து விஜயாவை திட்ட விஜயா நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன் என்று சொல்ல ரவி நீங்க அண்ணியை பத்தி இப்படி பேசினது ரொம்ப தப்பு என்று சொல்ல ஸ்ருதியும் ஆமா நீங்க ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை இல்லை பதில் சொல்லி முடித்திருக்கலாம் ஆனா மீனாவை கஷ்டப்படுத்துற மாதிரி இப்படி பேசி இருக்கக் கூடாது தப்பு உங்க மேல தான் என்று சொல்கிறார்.
எல்லாரும் என்ன நான் தப்பு பண்ண மாதிரி பேசுறீங்க உண்மையை தானே சொன்ன இவ அப்பா இவளுக்கு என்ன குண்டுமணி தங்கத்தை சேர்த்து வச்சிட்டா போய் சேர்ந்தார் என்று பேச அத்தை என்று சத்தம் போடும் மீனா உங்களுக்கு என்னத்தான் பிரச்சனை என்று சொல்லிவிட்டு ரூமுக்குச் செல்ல விஜயா எங்கடி போற இப்ப நின்னு பேசு என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ரூமுக்குள் இருந்து வெளியே வந்த மீனா தனது கழுத்தில் இருந்து நகைகளை கழட்டி வைக்க இந்தாங்க நீங்க போட்ட நாங்க என்று சொல்ல அண்ணாமலை என்னம்மா இது என்று கேட்க வேண்டாம் மாமா யாரும் இவங்க திரும்பத் திரும்ப அவமானப்படுத்தி பேசிக்கிட்டே இருக்காங்க என்னாலயும் ஒரு அளவுக்கு தான் பொறுமையா இருக்க முடியும் என்று கோபப்படுகிறார்.
இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் முத்து என்ன நடந்துச்சு என்ன ஆச்சு என்று கேட்க என்ன சொல்லணும் என்று மீனா கோபப்பட அண்ணாமலை உங்க அம்மாவோட வாயை பத்தி உனக்கு தெரியாதா என்று கூறுகிறார். அப்போ சும்மா இல்லாமல் விஜயா என்னமோ எல்லா நகையும் கழட்டி கொடுத்துட்ட மாதிரி பேசுற உன் கழுத்துல இருக்குற குண்டுமணி தாலி கூட நாங்க போட்டதுதான் என்று சொல்ல நீங்க இப்படித்தான் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும் என்று அதையும் மேஜையின் மீது வைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மீனா வெறும் மஞ்சள் கயிறுடன் இருப்பதை பார்த்த அண்ணாமலை தாலியாவது எடுத்து போட்டுக்கலாமா என்று சொல்ல இனிமே என் கழுத்துல நகைனு ஒன்னு ஏறனும்னா அது என் புருஷன் சம்பாதிக்கிற பணத்தில் வாங்கியதாக தான் இருக்கணும், அப்ப யாரும் அத பரிதாபமாக சொல்ல முடியாது இல்ல என் புருஷன் பணத்தில் மட்டும் தான் எனக்கு உரிமை இருக்கு, இன்னொரு முறை யாராவது என் குடும்பத்தை பற்றியும் அப்பாவை பத்தியும் பேசினீங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார்.
பின்னாடியே வந்த முத்து நீ செஞ்சது தான் சரி. அவங்க நகை எதுவும் நமக்கு வேண்டாம். உனக்கு என்னென்ன வேணும்னு லிஸ்ட் போட்டு கழட்டி கொடுத்தது என்ன நான் லிஸ்ட் போட்டு எல்லாத்தையும் வாங்கிடலாம் என்று நோட்டையும் பேனாவையும் எடுத்து கொடுக்கிறார். மொத்தமா வாங்க முடியாது நாளும் ஒவ்வொன்னா பணத்தை சேர்த்து வச்சு வாங்கிடலாம் என்று முத்து சொல்ல மீனா தேவையானதை லிஸ்ட் போடுகிறார்.
அதைத் தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வரும் விஜயா ரூம் இல்லாம ஹாலுக்கு வந்துட்டேன் என்று சொல்லி வருத்தப்படுகிறார். பார்வதி அதாவது வந்துச்சு என்று சொல்ல இப்போதைக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் அதுதான் அதுலயும் இந்த மீனா ஓழரையை கூட்டிட்டா என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…