baakiyalakshmi serial today episode update 26-09-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா கணேஷ் வீட்டுக்கு வந்து கணேஷ் அமிர்தாவோட வாழ்க்கையில் திரும்ப வரவே கூடாது. நிலா எழிலை தான் அப்பாவா நினைக்கிறா, கணேஷ் எந்த ஒரு உறவையும் சொல்லிக்கிட்டு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்ப எதிரே கணேஷ் வந்து விடுகிறார். வாங்க அத்தை என்று சொல்ல அமிர்தாவின் அம்மா எதையும் பேசாமல் கிளம்பி சென்று விடுகிறார்.
பிறகு கணேஷ் என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க இனிமேல் நீ அமிர்தாவை பார்க்கவே கூடாதுன்னு சொல்றாங்க அவ இப்பதான் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்கிறார் என்று சொல்ல கணேஷ் அது எப்படி பார்க்காமல் இருப்பேன். அவ என்னுடைய பொண்டாட்டி நிலா என்னுடைய குழந்தை நான் அவங்க ரெண்டு பேரையும் தேடி கண்டுபிடித்து கூட்டி வருவேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.
அடுத்ததாக கோபி அக்கவுண்டுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவில்லை என மேனேஜர் சுரேஷை கூப்பிட்டு சத்தம் போட பிறகு செந்தில் அங்கு வந்து என்கிட்ட வாங்கின கடனை திருப்பிக் கொடு என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார். கோபி ஏதாவது லோன் எடுத்துக் கொடுடா எனக்கும் பணம் தேவைப்பட்டு உனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்திடுவேன் என்று சொன்ன அவர் எதுக்கு உனக்கு லோன் எடுத்து கொடுத்து அதையும் சேர்த்து நானே கட்டவா என திட்டிவிட்டு செல்கிறார். அது மட்டும் இல்லாமல் நீ வேலையில கவனம் செலுத்தாமல் பாக்கியா பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க என திட்டுகிறார்.
அடுத்து செழியன் மாலினியை பார்க்க வர மாலினி அவன் ஆசைப்பட்ட வாட்சை கிப்ட்டாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். அடுத்து இங்கே பாக்கியா ஆபீஸில் ராதிகாவை பார்த்து கேன்டீன் விஷயமாக பேச போக எனக்கு வேலை இருக்கு வெயிட் பண்ணுங்க என்று சொல்லி நீண்ட நேரம் காக்க வைக்கிறார்.
பிறகு என்ன விஷயம் என கேட்க கேன்டின் விஷயமாக பாக்கியம் பேச ஆல்ரெடி சொன்னதுதான் எங்களுக்கு உங்களோட காண்ட்ராக்டை கன்டினியூ பண்ண விருப்பமில்லை என அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…
https://youtu.be/8M_qU0YXY-I?t=7
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…