தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியின் முகம் மாறி இருக்க என்னாச்சு கோபி குடிச்சிருக்கியா என்று ஈஸ்வரி கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா ஒரு சண்டை என்ன சொல்ல என்ன சண்டை என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.மிரட்டிய விஷயத்தையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே இனியா கோபப்பட்டு பேச எதுவுமே பேசாத நான் பாத்துக்குறேன் நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு எஃப் ஐ ஆர் பதிவு பண்ணிட்டாங்க இதுக்கு மேல எல்லாமே அவங்க பார்த்துப்பாங்க என்று கோபி சொல்லுகிறார்.
ரூமுக்குச் சென்று இனியா டென்ஷனாக இருக்க முதலில் சுதாகருக்கு ஃபோன் போட சுவிட்ச் ஆஃப் எல வருகிறது பிறகு நிதிஷுக்கு போன் போட முதலில் ரிங் போயும் நிதிஷ் போனை எடுக்காமல் இருக்க இரண்டாவது முறை பண்ணும்போது சுதாகர் வந்து போனை அட்டென்ட் பண்ணுகிறார் நான் நிதிஷ் அப்பா பேசுறேன் என்று சொல்ல எதுக்காக எங்க அப்பாவ மிரட்டு நீங்க அடிச்சீங்க என்று சொல்ல குழந்தை அதுக்குள்ள வந்து வீட்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுச்சா என்று சொல்ல பார்த்து பேசுங்க என்று மிரட்டுகிறார். மீண்டும் சுதாகர் ஓவராக பேச இனியா போனை வைத்துவிட்டு இதுக்கு மேல சும்மா இருக்க கூடாது என போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க வருகிறார்.
போலீஸ் ஸ்டேஷன் என்று வந்து இறங்கிய கொஞ்ச நேரத்தில் சுதாகர் ஃபோன் போட்டு இனியாவிடம் நீ நித்திஷ் மேல கொடுத்து இருக்கிற கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிடு அவன் பழைய மாதிரி ஆயிடுவான்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் வாங்கி கொடுத்துடறேன் நீங்க கல்யாணத்துக்கு பண்ண செலவு வட்டியோட திருப்பி கொடுத்துவிடுகிறேன் இது மட்டும் இல்லாம உங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட் கொடுத்துடறேன் பணம் கூட கொடுக்கிறேன் என சொல்லுகிறார் உங்கள என்னால நம்ப முடியாது என்று சொல்ல விட்டு ஃபோனை வைத்து விடுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் போன் போட்டு நான் உங்க அம்மாவோட முதல் ரெஸ்டாரன்ட்ல தான் இருக்கோம் இடத்தை கூட உனக்கு சொல்லிட்டேன் நீ நேர்ல வந்தா நான் உனக்கு பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என்று சொல்ல இனியா கம்ப்ளைன்ட் கொடுக்காமல் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார்.
உள்ளே வந்து பார்க்க நிதிஷ்தை இல் இருப்பதைப் பார்த்து இனியா அதிர்ச்சி அடைகிறார் உங்க அப்பா எங்க என்று கேட்க நிதிஷுக்கு முதலில் யார் வந்ததுன்னே தெரியாமல் இருக்க பிறகு இனியா மை வைப் என்று சொல்ல நான் உன் பொண்டாட்டி எல்லாம் கிடையாது என்று சொல்லுகிறார் உடனே உங்க அப்பா தானே நீங்க வர சொன்னாரு இங்கே என கேட்க எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல இப்ப இங்க நாளைக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார் எங்க அப்பா ஒரு பிராடு அயோக்கியன் அவன் என்ன வேணா பண்ணுவான் என்று சொல்ல அவரைப்பற்றி உன் கிட்ட சொல்றேன் பாரு அவர் பார்த்து வச்ச பொண்ணு தானே நீயும் அப்படித்தானே இருப்ப என்று சொல்லுகிறார். எனக்கு அமைவதெல்லாம் பாரு கேடுகட்ட அப்ப உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி அடுத்தது என்ன கல்யாணம் தானே வீட்ல சொல்லி பண்ணிட்டீங்களா இல்ல ஓடிப்போய் பண்ணி இருக்கீங்களா என்று கேட்கிறார்.
பிறகு நித்திஷ் என்ன பேசுகிறார்?என்ன நடக்கிறது? இனியா பதில் என்ன சொல்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


