Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியிடம் பேச மறுத்த இனியா. அதிர்ச்சியில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial today episode update 03-04-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி பாக்யாவுக்கு இனியா மாத்திரை சாப்பிட்ட விஷயத்தை சொல்ல அவர் பதறி அடித்துக் கொண்டு எழிலை எழுப்பி விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து வருகிறார்.

ஹாஸ்பிடல் வந்த பாக்கியா ராமமூர்த்தியிடம் அவளுக்கு என்னாச்சு? எப்படி இருக்கா? என நலம் விசாரிக்க ராமமூர்த்தி டாக்டர் உள்ள ட்ரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க என சொல்ல உடனே நான் அவளை பாக்கணும் என பாக்கியா அடம் பிடிக்க இப்போ பார்க்க முடியாது கொஞ்சம் அமைதியா இருமா என சமாதானம் செய்கிறார். எழில் என்னாச்சு என கேட்க ராமமூர்த்தி இவங்க ரெண்டு பேரும் திட்டுனாங்க அந்த கோபத்துல இப்படி பண்ணிட்டா என்ன சொல்ல எழில் கோபியிடம் சண்டை போட கோபி நாங்களும் டென்ஷனாத்தான் இருக்கோம் நான் அவளை திட்டவில்லை கண்டிச்சோம் என சொல்கிறார்.

ராதிகா அப்படி ஒன்னும் எதுவும் சொல்லல, அவ தப்பு செஞ்சா அதை கண்டித்தோம் என சொல்ல அவளை கண்டிக்க நீங்க யாரு என எழில் ஷாக் கொடுக்கிறார். பிறகு டாக்டர் இரண்டு பேர் மட்டும் இனியாவ பாருங்க என சொல்ல கோபி உள்ளே போக ராதிகா மற்றும் பாக்கியா என இருவரும் உள்ளே போக முயற்சி செய்ய ராமமூர்த்தி பாக்கியா போகட்டும் அவ தான் பெத்தவ என சொல்லி ராதிகாவை தடுத்து நிறுத்துகிறார்.

பிறகு இருவரும் உள்ளே போன நிலையில் கோபி இனியாவிடம் பேச இனியா பதில் ஏதும் பேசாமல் இருக்கிறார். அதே சமயம் பாக்கியா உள்ளே வந்ததும் இனியா அம்மா என பேசி கட்டிப்பிடித்துக் கொள்கிறார். கோபி என்னென்னமோ பேச இனியா எதுவும் கண்டு கொள்ளாமல் பாக்யாவிடம் மட்டுமே பேசுகிறார்.

பாக்கியா இனியாவுக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் கூறுகிறார். இதைப் பார்த்த கோபி மன வருத்தத்துடன் வெளியே வருகிறார். வெளியே வந்ததும் நான் உங்க பின்னாடி உள்ளே வர முயற்சி பண்ண, ஆனா என்னை உள்ள விடல, பாக்யா எதுக்கு உள்ள வரணும் என வாக்குவாதம் செய்ய கோபி இப்படி எல்லாத்துக்கும் சண்டை போட்டு சண்டை போட்டு தான் அவ இப்ப இங்க வந்து படுத்து இருக்கா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு கோபி, ராதிகா மற்றும் மயூவை வீட்டில் விட்டு வருவதாக சொல்ல நீங்க இங்கிருந்து என்ன பண்ண போறீங்க நீங்களும் வாங்க என ராதிகா சொல்ல நான் இங்கே கண்டிப்பா இருக்கணும் இனியா என் பொண்ணு என கூறுகிறார். பிறகு ராதிகா நானே போகிறேன் என மயூவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். மறுபக்கம் அமிர்தா ஈஸ்வரி பாட்டி மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் இனியா ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் ஹாஸ்பிடல் கிளம்பி வருகின்றனர்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial today episode update 03-04-23
baakiyalakshmi serial today episode update 03-04-23