Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழனிச்சாமி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் செலக்ட் ஆக குடும்பத்தினர் அனைவரும் ரொம்ப சந்தோஷப்படுகின்றனர். பாக்கியா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சந்தோஷப்படுகிறார் உடனே கோபியும் இனியாவிற்கு வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகிறார் பிறகு ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்யா லிஸ்ட்டை செக் பண்ணி விட்டு செப்பிடம் 750 ஆர்டர் வந்திருக்கு என்று சொல்ல அவ்வளவுதானா நான் ஆயிரம் வரும் பார்த்தேன் என்று சொல்லுகிறார். இல்ல இல்ல இதுவே அதிகம் தான் என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மேடம் செஞ்சுக்கலாம் என்று சொல்லியும் பாக்கியா பரவால்ல இதுவே போதும் அளவுக்கு மீறி செய்ய முடியாது என்று சொல்லிவிடுகிறார். எனக்கு தெரிஞ்ச கடையில பொருள் வாங்கினால் சீக்கிரமா கொடுத்துடுவாங்க என்று சொல்ல இல்லை நான் பார்த்து பார்த்து வாங்குனா தான் எனக்கு திருப்தியா இருக்கும் நான் வாங்குற கடையில வாங்கிக்கிறேன் என்று பாக்கியா சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து பழனிச்சாமி வர செல்வி அப்போ நான் போய் வேலையை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப என் மளிகை சாமான் வாங்கணும் தெரியாதா என்று சொல்ல ஆமா நீங்க பேசினா எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும் அதுக்குள்ள நான் போய் வேலையை பார்க்கிறேன் உங்களுக்கு என்ன சார் ஒரு காபியோ ரெண்டு பஜ்ஜியும் தானே எடுத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு ரெஸ்டாரன்ட்டில் பிரியாணி எடுத்த ஆர்டரை பற்றி பழனிச்சாமியிடம் சொல்லிக் கொண்டிருக்க நல்ல விஷயம் தான் மேடம் பண்ணுங்க என்று என்கரேஜ் செய்கிறார். அதுக்கப்புறம் ரெஸ்டாரன்ட் க்கு அம்மா வந்தாங்கன்னு கேள்விப்பட்டேன் என்று சொல்ல ஆமா சார் ஆனா இருக்குறவங்க அவங்களை ரொம்ப காயப்படுத்துறாங்க என்று சொல்லி நடந்த விஷயங்களை பற்றி சொல்லுகிறார் உடனே பழனிச்சாமி மத்தவங்களை விட அவங்களால நீங்க அதிகமா காயப்பட்டு இருக்கீங்க ஆனா இந்த நேரத்துல அவங்கள இதெல்லாம் திருப்பி கேக்கணும் உங்களுக்கு தோணலையா என்று கேட்க கண்டிப்பா கிடையாது சார் ஒருத்தரும் நம்பல காயப்படுத்தும் போது நம்ம இதயத்தை சுத்தி கிழிக்கிற மாதிரி இருக்கும் அந்த வலியை வந்து நான் அவங்களுக்கு திருப்பி தர மாட்டேன் அந்த வலியோட கஷ்டம் என்னன்னு எனக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்ல பழனிச்சாமி உடனே இது தாங்க பக்குவம் என்று பாக்யாவை பாராட்டுகிறார். பிறகு கோபி இனியாவின் டான்ஸ் வீடியோவை பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செழியன் வருகிறார்.

செழியன் இடம் கோபி இனியாவின் டான்ஸ் பற்றி பேச முதலில் பாட்டி சம்மதிக்கவில்லை என்று சொல்ல அதெல்லாம் போக போக சரியாயிடும் என்று சொல்லுகிறார் பைனான்ஸ் போனா கண்டிப்பா இனியா தான் வின் பண்ணுவா என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து எழில் மெசேஜ் செய்கிறார்.

உடனே கோபி யார் என்று கேட்க எழில்தான் என்று சொல்லுகிறார். ஆமா செழியா நானே கேட்கணும்னு நினைச்சேன் எழில் டல்லா இருந்தானே என்ன ஆச்சு என்று கேட்க அதற்கு செழியன் அவன் நல்ல கதை எல்லாம் வச்சிருக்கான்பா ஆனா ஒரு வாய்ப்பு கிடைக்க மாட்டேந்து மொக்க கதை எழுதுற டைரக்டர் கலாம் வாய்ப்பு கிடைக்குது ஆனால் இவன் செம கத ரெடி பண்ணி வச்சிருக்கான் ஒருவாட்டி வாய்ப்பு கிடைச்சா பெரிய ஆளா வந்துருவான் அப்பா என்று பேச கோபியும் கண்டிப்பா வருவா அவனுக்கு நல்ல டேலண்ட் இருக்கு ப்ரொடியூசர் எல்லாம் போய் பாக்குறானா என்று கேள்வி கேட்கிறார். அதெல்லாம் போயிட்டுதான்பா வந்துகிட்டு இருக்கான் என்று பேசிவிட்டு உனக்கு என்ன வேணும் ஜூஸ் இல்ல காபியா என்று கேட்க காபி ஓகே என்று சொல்ல கோபி எடுத்து வர செல்கிறார்.

பிறகு பாக்யா நாளைக்கு பிரியாணி செய்ய என்னென்ன ரெடி பண்ணனும் என்று பேசிக் கொண்டிருக்க செல்வி சிக்கன் மட்டன் எல்லாம் சொல்லிட்டியா அக்கா கேட்க அது எப்படி சொல்லாமல் இருப்பேன் சாயந்திரமே சொல்லிட்டு தான் வந்தேன். காலையில் பிரெஷா வந்துரும் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி வர ஏதாவது வேணுமா அத்தை என்று கேட்க இல்ல உன்னோட பிரியாணி விஷயம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்டு எல்லா கரெக்டா போயிட்டிருக்கு அத்த நாளைக்கு காலையில நீங்க வந்து கொஞ்சம் அடுப்பு பத்த வச்சு விட்டுட்டு வாங்க என்று சொல்ல ஈஸ்வரி முதலில் மறுக்கிறார் ஆனால் பாக்யா நீங்க என்னோட ராசியானவங்க அதனால நீங்க தான் வந்து ஸ்டார்ட் பண்ணனும் என்று சொல்ல உன் மேல இருக்குற அக்கா வேலை தான் நான் சொல்றேன் நான் ஆரம்பிச்சா அது நல்லா நடக்காது என்று சொல்லுகிறார். உடனே நீங்க என்ன பொண்ணா நெனச்சா வாங்க என்று சொல்ல ஈஸ்வரி சரி என்று சம்மதிக்கிறார். இதுக்கப்புறம் என்னை எதுக்கும் கூப்பிடக்கூடாது சரியா என்று சொல்லுகிறார்.

பிறகு ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு வராமல் இருக்க என்ன செய்கிறார்? பாக்யா அவரை எப்படி வர சம்மதிக்க வைக்கிறார் என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


BaakiyaLakshmi Serial Today Episode