Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியால் குடும்பத்தில் ஏற்படும் அடுத்த பிரச்சனை.. மாப்பிள்ளை கோலத்தில் வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

Baakiyalakshmi Serial Gopi in Radhika Getup

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி வீட்டுக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வந்த நிலையில் வீட்டில் ஒவ்வொருவருக்காக விஷயம் தெரிய தொடங்கியுள்ளது.

கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரியவந்ததையடுத்து அந்த அதிர்ச்சியில் அவருடைய அப்பா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். இது குடும்பத்திற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் நிலையில் அடுத்த அதிர்ச்சி வெகுவிரைவில் காத்துக் கொண்டிருக்கிறது.

ஆமாம், பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி மாப்பிள்ளை கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ராதிகாவுக்கு விவாகரத்து கிடைத்து விட்ட நிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு இன்னும் ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.