ராதிகாவின் அம்மா சொன்ன வார்த்தை, பாக்யா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா எப்படி எல்லாம் பேசிட்டு போறாங்க பாத்தியா என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார். இனியா பேசியதெல்லாம் கோபியிடம் சொல்லி இனியா சொல்லாததையும் சேர்த்து சொல்லுகிறார். இனியா அப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டாங்க என்று சொல்ல அப்போ நான் பொய் சொல்றதெல்லாம் ராதிகா கிட்ட கேளுங்க என்று சொல்லுகிறார். உடனே ராதிகா எங்க வீட்டு சந்தோஷத்தை நீங்க தான் கெடுத்தீங்க நீங்க எதுக்கு வந்தீங்க என்று கேட்டதாக சொல்லிவிடுகிறார்.இனியா அப்படி எல்லாம் சொல்ல, ராதிகாவின் அம்மா போய் அவகிட்டயே கேளுங்க எதுக்கு இப்படி எல்லாம் பேசினீங்க என்று சொல்லுகிறார்.

கோபி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து இனியாவை கூப்பிடுகிறார். பிறகு வீட்டிற்கு வந்த விஷயத்தை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே கோபி இனியவை உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வெளிய போகலாம் என்று கூப்பிடுகிறார். இனியா பாக்யாவிடம் நான் அப்பா கூட வெளியே போயிட்டு வரேன் மா என்று சொல்ல பாக்யா எதுவும் பேசாமல் இருக்கிறார் உடனே கோபி அதுதான் சொல்லிட்ட இல்ல வாம்மா என்று காரில் ஏற்றி செல்கிறார்.

இதனை ராதிகாவின் அம்மா பார்த்துவிட உடனே போய் ராதிகா கிட்ட சொல்லணும் என்று யோசிக்க அவ கிட்ட சொல்றதும் சேர்த்து கிட்ட சொல்றது ஒன்னு தான் என்று முடிவு செய்து நேராக பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். அங்கே பாக்யா எதுக்கு அத்த ராதிகா வீட்டிற்கு இனியா போனா என்று கேட்க உடனே ராதிகாவின் அம்மா என் பொண்ணு உயிரை வாங்குறதுக்கு தான் என்று சொல்லுகிறார். என் பொண்ணு நிம்மதியாக இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா என்று பேச ஈஸ்வரி அவருக்கு பதில் பேசுகிறார். முதல்ல கோபி என்னோட பையன் அப்புறம் தான் உன்னோட மருமகன் என்று சொல்லுகிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் பையனே இல்லைன்னு சொன்னீங்க இப்ப எப்படி சொல்றீங்க என்று கேட்கிறார் ராதிகாவின் அம்மா.

இனியா வந்து ராதிகாவால தான் நிம்மதியே போயிடுச்சு குடும்பத்துல சந்தோஷம் போயிடுச்சு என்று சொல்றா அவளுடைய வயசு என்ன இவளோட வயசு என்ன என்று கேட்க உடனே ஜெனி அவ உண்மையைதான சொன்னான் என்று சொல்லுகிறார். நீங்க அவங்க அப்பாவ பார்க்க வந்த உடனே இல்லன்னு சொல்லி அனுப்பி இருந்தா எந்த பிரச்சனையும் இல்ல நீங்க அவகிட்ட பேசினதுக்கு அவன் பதில் சொன்னால் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரியும் அவ அப்படி சொல்லி இருந்தா அதுதான் உண்மை என்று ராதிகாவின் அம்மாவிடம் சொல்லி நீயா போறயா கழுத்தை புடிச்சு வெளியே தள்ளவா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பாக்கியாவிடம் எதுவும் இதைப்பற்றி நீயா கிட்ட கேட்காத என்று சொல்லிவிடுகிறார். ராதிகா சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகாவின் அம்மா வருகிறார்.

அவரு இனியாவ கூட்டிட்டு சுத்த போயிட்டாரு அத போய் நியாயம் கேட்க போனா அவங்க ரவுண்ட் கட்டி திட்டி அனுப்புறாங்க என்று சொல்ல ராதிகா அழுகிறார் நான் ஒரு தப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துட்ட கோபியை கல்யாணம் பண்ணதிலிருந்து பிரச்சனையா தான் இருந்துக்கிட்டு இருக்கு. இதனால மயிராவும் பாதிக்கப்படுற. என்று அழ நீ அழாத நான் இருக்கேன் ராதிகா என்று சொல்லுகிறார். பாக்யா விஷயத்துல கோபி பண்ணது எனக்கு பயமா இருக்கு. என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

கோபி இனியவிடம் என்ன கேட்கிறார் அதற்கு இனியாவின் பதில் என்ன என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

17 minutes ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

46 minutes ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

4 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

21 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

21 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

21 hours ago