தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு என்கிட்டயே கேள்வி கேக்குறியா என்றும் கோபப்பட, கோபியின் நண்பரும் இப்போதைக்கு எதுவும் பாக்யா கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல நீ என்ன ஜாமினில் எடுத்ததுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு மீதி விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லி கோபமாக சென்று விடுகிறார். மறுபக்கம் இனியா வேகமாக இறங்கி வந்து ஈஸ்வரியை கூப்பிட்டு டிவியை போடுகிறார். என்னாச்சு என்று கேட்க இவங்க பேட்டி கொடுத்து இருக்கக் கூடாது பாட்டி நியூஸ்ல என்ன போட்டு இருக்காங்க பாருங்க என்று டிவியை போடுகிறார்.
அதில் பத்திரிக்கையாளர்கள் ராதிகாவிற்கும் இதில் சம்பந்தம் இருக்கு என்றபடி பேசுகின்றனர். பிறகு அக்கம் பக்கம் விசாரித்ததிலும் அடிக்கடி இந்த வீட்டிற்கு போலீஸ் வரும் என்றும் தெரிவித்துள்ளனர் இதை கேட்டு டென்ஷனான ஈஸ்வரி டிவியை ஆப் செய்து வைத்துவிட்டு இதுக்கு தான் சொன்னேன் எதுவும் பேசாதன்னு கேட்டியா என்று கேட்கிறார். அதற்கு பாக்யா என் ரெஸ்டாரன்ட் பிரச்சனையை மட்டும் தான் நான் பேசினேன் அதுக்கு இவங்க கண்ணு காது மூக்கு வச்சு பேசினா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது என்னோட முடிவுல எந்த மாற்றமும் கிடையாது என்று சொல்ல உன்ன பத்தி மட்டும் யோசிக்காத பாக்கியா நாளைக்கு இனியாவோட கல்யாணத்துல பிரச்சனை வரும் என்று சொல்ல மத்தவங்கள பத்தி யோசிச்சு யோசிச்சு கஷ்டப்பட்டதெல்லாம் போதும் இனிமே நான் எனக்காக வாழப் போறேன் எனக்காக யோசிக்க போறேன் என்று உறுதியாக சொல்லிவிட்டு கிளம்ப அந்த நேரம் பார்த்து செழியன் வருகிறார். ஈஸ்வரி கோபி எப்படி இருக்கா என்று கேட்க ரிலீஸ் பண்ணிட்டாங்க பாட்டி என்று சொல்லுகிறார். உடனே பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இனிமே எந்த பிரச்சனையும் இல்லை என்று ஈஸ்வரி சொல்ல அப்படியெல்லாம் சொல்ல முடியாது பாட்டி ஜாமீன் மட்டும் தான் கொடுத்திருக்காங்க இதுக்கு ஒரே வழி தான் இருக்கு என்று சொல்ல என்ன என்று ஈஸ்வரி கேட்கிறார் அம்மா கேச வாபஸ் வாங்கணும் என்று சொல்ல ஈஸ்வரி இனியா மற்றும் செழியன் மூவரும் இந்த ஒருவாட்டி மன்னிச்சிடு பாக்யா என்று கேட்க ரொம்ப சூப்பர் என்று பாக்யா சொல்லுகிறார்.
இவ்வளவு நாளா அவரு என்ன கஷ்டப்படுத்தும் போது உங்க யாருக்கும் எந்த வருத்தமும் வரல ஆனா இப்ப நான் ஒரு அடி அவர திருப்பி அடிக்கும்போது உங்க எல்லாருக்கும் வருத்தமா இருக்கு அப்படித்தானே அப்படின்னு சொல்லிவிட்டு சரியா உங்க அப்பா பண்ணது சரியா தப்பா என்று ஒரே வார்த்தை கேட்கிறார். தப்பு தாமா ஆனா என்று சொல்ல ஆனால் தேவையில்லை தப்பு தானே என்று சொல்லிவிட்டு இனியா மற்றும் ஈஸ்வரியிடம் கேட்கிறார். அவர்களும் தப்புதான் என்று சொல்ல அந்த வானமே இடிஞ்சு விழுந்தாலும் அவர் மேல கொடுத்த கேச நான் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் டிவி பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவும் ராதிகாவின் அம்மாவும் ராதிகாதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று சொன்னவுடன் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். நான் போய் பாக்கியா கிட்ட கேட்டுட்டு வரேன் என்று கோபமாக ராதிகாவின் அம்மா கிளம்பு அந்த நேரம் பார்த்து கரெக்டாக கோபி வருகிறார். இருங்க மாப்ள நான் ஆரத்தி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல ராதிகா டென்ஷன் ஆகி சுதந்திர போராட்டத்துக்கு போயிட்டு வந்திருக்காரு அதனால ஆரத்தி எடுத்துட்டு வரவை பண்றது எல்லாம் அயோக்கியத்தனம் என்று திட்டுகிறார். உங்களால் நான் வெளியேவே தலை காட்ட முடியாத நிலைமை இப்ப எனக்கு இருந்திருக்கு. இப்போ என்ன தெரியுமா சொல்றாங்க நான் தான் உங்கள பாக்கியா கிட்ட இருந்து பிரிச்சிட்டனா நான்தான் உங்களுக்கு இந்த மாதிரி செய்யணும் சொல்லி சொன்ன நான் போதுமா இன்னும் நான் எவ்வளவு அசிங்கப்படணும்னு தெரியல என்று கோபியிடம் கோபப்பட்டு விட்டு உன் மூஞ்சில முழிக்கவே புடிக்கல என்று உள்ளே சென்று விடுகிறார்.
கோபி என்ன செய்யப் போகிறார்? பாக்யாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.