Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை சந்தித்த செழியன், ராதிகா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி வந்து ஈஸ்வரிக்கு மாத்திரை கொடுத்து கொண்டு இருக்க, கிச்சனில் பாக்யாவும் செல்வியும் ராதிகாவின் அம்மா நடந்து கொண்ட விஷயத்தை பேசிக் கொண்டிருக்கின்றன. அந்த நேரம் பார்த்து ராதிகா வீட்டுக்குள்ளே வர ஜெனியிடம் நலம் விசாரிக்கிறார். பிறகு இவங்க கரெக்டா சாப்பிடுறாங்களா என்று ஈஸ்வரியை பற்றி விசாரிக்கிறார். உடனே எங்க அம்மா நடந்து கொண்ட விஷயம் தப்புதான் நான் சரின்னு சொல்ல வரல சாங்கியம் சம்பிரதாயம் அப்படின்னு பேசுற வயசுல தான் அவங்க இருக்காங்க என்று அம்மா பண்ணிய தப்புக்கு மன்னிப்பு கேட்கிறார். உடனே நான் இன்னொன்னு பேசணும், இந்த நேரத்துல இது பேசுவது சரியா தப்பா என்று எனக்கு தெரியாது ஆனால் இதே சாங்கியம் சம்பிரதாயம் என்று பேசி நீங்க எனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கீங்க ஆனா அது உங்களுக்கு வரும்போது அந்த கஷ்டத்தோட வலி என்னன்னு தெரியும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். குழந்தை நின்ன போது இந்த வயசுல குழந்தை தேவையா ஊர் உலகம் என்ன பேசும் என்றெல்லாம் பேசி குழந்தையை கலைக்க சொன்னீங்க கோபியை கல்யாணம் பண்ணிய போது என்ன அசிங்கப்படுத்தினீங்க என்றெல்லாம் பேசுகிறார் ராதிகா.

இதையெல்லாம் கேட்டா ஈஸ்வரி எதையும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பிறகு உடம்ப பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். பின்னாடி வந்த பாக்யா நில்லுங்க என நிறுத்தி நீங்க பேசுனது சரியா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா எங்க அம்மா பேசுனது தப்புதான் நான் இல்லன்னு சொல்லல ஆனா அதே இடத்தில் இருந்து அவங்க பேசுனபோது என் மனசும் இப்படித்தான் கஷ்டப்பட்டு இருக்கோ என்பதை அவங்க இந்த தருணத்தில் தான் புரிஞ்சுக்க முடியும் இத்தனை நாளா அவங்க அடி கொடுக்கிற இடத்தில இருந்தாங்க ஆனா இப்பதான் அடி வாங்குற இடத்துல இருக்காங்க நான் இப்பயும் இத சொல்லலனா அவங்க திருப்பியும் அதே தப்பத்தான் பண்ணுவாங்க என்று எல்லாம் பேச பாக்யா இதுக்கு நீங்க வராமலே இருந்திருக்கலாம் என்று சொல்ல, ராதிகா அதுக்கு எனக்கு மனசாட்சி இடம் கொடுத்திருக்காது என்று சொல்லுகிறார்.

நீங்க பெரியவங்க தானே என்று கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் இருக்கலாம். என்று சொல்ல உங்க விஷயத்தையே நீங்க எடுத்துக்கோங்க கோபி ஒரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போ என்னதான் சொல்ற, அப்போ அவங்க கிட்ட என்ன சொன்னாங்க ஊர் உலக என்ன பேசும் இதெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்திடு என்று உங்களுக்கு அட்வைஸ் கொடுத்தாங்க. அப்ப கூட அவங்க உங்கள பத்தி யோசிக்கல ஊர் உலகத்தை பற்றி தான் கவலைப்பட்டாங்க ஆனா இன்னைக்கு அவங்களுக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார்.

செல்வி,அம்மாவை பார்த்து பயந்துகிட்டு இருந்தவங்க எல்லாம் இப்போ அவங்களுக்கு அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்க பாக்கியா ஜெனியை சாப்பிட கூப்பிடுகிறார் செழியன் வந்தவுடன் சாப்பிடறேன் என்று சொல்ல அவன் எப்போ வருவான் என்று பாக்யா கேட்கிறார் தெரியல என்று சொல்ல அப்ப நீ போய் பாட்டிய கூட்டிட்டு வந்து சாப்பிடு என்று சொல்லுகிறார் ஜெனி ஈஸ்வரி சாப்பிட கூப்பிட ஈஸ்வரி எனக்கு சாப்பாடு வேணாம் மாத்திரை வேண்டாம். ஒன்னும் வேணாம் விட்டுடுங்க என்று சொல்லுகிறார். அதற்கு யாரோ ஒருத்தர் சொன்னதுக்காக எதுக்கு இப்படி ஒக்காந்து உங்க ஹெல்த் ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று ஜெனி கேட்க, அதற்கு ஈஸ்வரி அவள் யாரோ ஒருத்தி தான் ஆனா அவ சொன்னது கரெக்ட் தானே இத்தனை நாளா ஊர் உலக என்ன பேசணும்னு தானே நான் பயந்து சொல்லிக்கிட்டு இருந்தேன் ஆனா இன்னைக்கு அந்த ஊர் உலகம் என்ன பேசும் போது எனக்கு தெரியுது என்று சொல்லுகிறார். நான் ஊர் சொல்றதையே கேட்டுக்குறேன் என்ன ஒரு வருஷம் வெளியே வரக்கூடாதுன்னு தானே சொல்றாங்க நான் வரல நான் வீட்டுக்குள்ளே இருக்கேன் நல்லது கெட்டது எதுக்கும் என்னை கூப்பிடாத பாக்கியா என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார்.

செழியன் கோபியை சந்தித்து என்ன பேசுகிறார்? அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update
BaakiyaLakshmi Serial Episode Update