Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பழனிச்சாமி குடும்பம் எடுத்த முடிவு, வெட்கப்படும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியுடன் எழில் இனியா ஈஸ்வரி ராமமூர்த்தி என எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அம்மா தெரு முழுக்க வாழைமரம் கட்டி சீரியல் லைட் போட்டு பாட்டு போட சொல்லி இருந்தாங்க நான் அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று சொல்ல எழிலும் இனியாவும் ஒரு டிஜே மியூசிக் போட்டு இருக்கலாம் என்று சொன்னதும் பாட்டு தானே ஸ்பீக்கர் ரெடியா இருக்கு, போன்ல கனெக்ட் பண்ணி பாட்டை போட்டு விட்டால் முடிஞ்சிடுச்சு என்று சொன்னதும் எழில் பாட்டை போடுகிறார்.

அதன் பிறகு பழனிச்சாமி அக்கா மகன் விமல் டான்ஸ் ஆடிக்கொண்டே கீழே இறங்கி வந்து ஈஸ்வரி ராமமூர்த்தி என எல்லோரிடமும் குத்தாட்டம் போடுகிறார். பிறகு பழனிச்சாமி இது என் அக்கா பையன் என அறிமுகம் செய்து வைக்கிறார்.

இனியாவை பார்த்ததும் விமல் வியந்து போக இனியாவும் விமலை பார்த்து வெக்கப்படுகிறார். அதன் பிறகு இனியா தனியாக வெளியில் போன் பேசிக் கொண்டிருக்க விமல் அங்கு வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு இனியா பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறார்.

மறுபக்கம் பழனிச்சாமியின் அக்கா கல்யாணத்த பத்தி பாக்யா கிட்ட பேசலாம் என்று சொல்ல தங்கச்சி வேண்டாம் என்று சொல்கிறார். இல்லன்னா அவங்க மாமியார் ஈஸ்வரி அம்மா கிட்ட பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி அங்கு வந்து என்ன பேசுறது என்று கேட்க எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள்.

இனியாவின் போன் நம்பர், காலேஜ் பற்றி கேட்க இனியா அதெல்லாம் தர முடியாது என்று சொல்கிறார். சரி நானே கண்டுபிடிக்கிறேன் என்று விமல் சொல்ல பார்க்கலாம் என்று இருவரும் உள்ளே செல்கின்றனர். பழனிச்சாமிக்கு கேக் வெட்ட பிறகு விமல் போட்டோ எடுத்துக்கலாம் என்று சொல்லி போட்டோ எடுக்க தொடங்குகிறார்.

பாக்யாவின் குடும்பத்தார் பழனிசாமி உடன் போட்டோ எடுத்துக்கொள்ள நிற்க பழனிச்சாமி வேலை செய்து கொண்டிருந்த பாக்யாவை கூட்டத்தில் தனது பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update