பாக்யா எடுத்த முடிவு,கோபத்தில் செழியன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மாலினி வீட்டுக்கு வந்து நான் உன்கிட்ட வந்து எனக்கு கல்யாணம் ஆகலனு சொன்னேனா? இந்த ப்ராஜெக்ட் வேண்டாம்னு எத்தனையோ முறை சொல்லி நீ கேட்டியா என்று கோபப்படுகிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தை எழில் வெளியில் நின்று கேட்க செழியன் இன்னொரு முறை என் வாழ்க்கையில தலையிட்டா கொன்னு போட்டு விடுவேன் என எச்சரிக்கிறார். பிறகு எதில் செழியனை கூட்டிட்டு போய் இப்படி வந்து சண்டை போடுவதை விட்டுவிட்டு உன் பிரச்சனையை தீர்க்க என்ன பண்ணலாம்னு யோசி என அட்வைஸ் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து எழில் பாக்யாவிடம் நடந்து விஷயங்களை சொல்ல இவன் எதுக்கு மாலினி வீட்டுக்கு போனான் என்று கேட்க செல்வி தம்பிக்கும் கோபம் வரும் இல்லையா அதான் போய் இருக்கு என சொல்கிறார். பிறகு பாக்கியா மரியமை காலேஜில் சந்தித்து செழியன் ஜெனியும் பிரிந்து வாழறாங்க, ஆனா அவங்க டிவோர்ஸ் வாங்கணும்னு நினைக்கவே இல்ல அவங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஒரு முறை பேசட்டும் அவங்க சந்திக்க ஏற்பாடு பண்ணனும் என்று சொல்லி கேட்க மரியம் என்னால இந்த விஷயத்துல எந்தவித உதவியும் செய்ய முடியாது என சொல்லிவிடுகிறார்.

பிறகு பாக்கியா ரெஸ்டாரன்ட் வர செல்வி வெளியில் நின்று எல்லாரையும் சாப்பிட வாங்க சாப்பிட வாங்க என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க பாக்யா என்ன பண்ணிட்டு இருக்க பிசினஸ் டெவலப் ஆக கொஞ்சம் லேட் ஆகுதுன்னு சொன்னேன்ல வா உள்ளே என கூப்பிடுகிறார். அப்போது பார்த்தீங்களா அதுதான் யாரும் சாப்பிட வரவில்லை என்பதை புரிந்துகொள்ள பாக்கியா அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யணும் என முடிவெடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து இனியாவின் காலேஜிற்கு வந்து அவரிடம் ரெஸ்டாரன்ட் எவ்வளோ பாக்குற வரைக்கும் என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது, அதனால நீ பீல் பண்ணாத என சொல்கிறார். நான் உன்னை பீல் பண்ணல டிஸ்டர்பன்ஸ் இல்லாம ஜாலியா இருக்கேன் என இனியா சொல்ல பாக்யா கோபித்துக் கொள்ள இனியா சும்மாதான் சொன்னேன் எனக்கும் பீலிங்கா தான் இருக்கு என கட்டிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode-update
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

14 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

14 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

14 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

14 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

15 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

18 hours ago