Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஃபங்ஷனுக்கு வந்த ஜெனி, ஏக்கத்தோடு செழியன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரன்ட் ஓபனிங் வேலைகள் பரபரப்பாக நடக்க அமிர்த்தா கோலம் போட செழியன் டெக்கரேஷன் வேலைகளை கவனிக்க இங்கும் மங்கும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பாக்யாவுக்கு திடீரென ஜெனி ஞாபகம் வர ஜெனி வருவாளா இல்லையா என்று தெரியாமல் வருத்தப்பட அமிர்தா, எழில் கண்டிப்பா ஜெனி வருவாங்க என்று ஆறுதல் கூறுகிறார்.

மறுபக்கம் ஜெனி ரெஸ்டாரன்ட் ஓபனிங்கிற்கு கிளம்பி கொண்டிருக்க ஜோசப் போக கூடாது என தடுக்க ஜெனி அப்பாவை மீறி கிளம்பி வருகிறார். ஜெனி வந்து இறங்கியதும் செல்வி பார்த்து மற்றவர்களிடம் சொல்ல எல்லோரும் ஓடி வந்து வரவேற்கின்றனர்.

மறுபக்கம் கோபி சதீஷ் உறவினர் ஸ்கூல் பங்ஷனுக்கு அமைச்சர் வராங்களா என்பதை கன்பார்ம் செய்து சதி வேலை செய்கிறார். இங்கே அமைச்சருக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.

ஜெனியின் குழந்தையை வாங்கி எல்லோரும் கொஞ்ச செழியன் ஏக்கத்துடன் பார்க்க ஜெனியும் இதை கவனிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update