Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடந்து முடிந்த கதிர், ராஜி திருமணம்.. பதற்றத்தில் கோமதி. இன்றைய பாக்கியலட்சுமி ,பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi-serial-episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. மெகா சங்கமம் என்ற பெயரில் இந்த இரண்டு சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர் சக்திவேல் சொன்ன விஷயங்களை நினைத்துப் பார்க்க ராஜி தன்னுடைய அப்பா முத்துவேல் என் பொண்ணு என்னுடைய மானத்தை காப்பாத்துவா என்னைக்கும் அவ தப்பான வழியில போக மாட்டா என்று பேசிய விஷயத்தை நினைத்து பார்த்து கண் கலங்குகிறார்.

பிறகு கதிர் கண்ணீருடன் ராஜி கழுத்தில் தாலி கட்ட பாக்கியா கோமதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள சொல்கிறார். கோமதி ஆசிர்வாதம் செய்தவுடன் பாக்யா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சொல்ல இருவரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கின்றனர்.

பிறகு கோமதி இதுவரைக்கும் செய்த உதவியை நான் மறக்க மாட்டேன் ஆனா இதுக்கு அப்புறம் செய்யப் போற உதவிதான் மிகப்பெரிய உதவி என சொல்லி கதிர், ராஜியை வீட்டுக்கு கொண்டு வந்து விட சொல்கிறார்.

அதன் பிறகு கதிரிடம் சென்று உங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு உங்களுக்கு நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன்னு சொல்ற நிலைமையில நான் இல்ல. இந்த விஷயம் மட்டும் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா அவர் உயிரையே விட்டுடுவாரு அதனால உங்களுக்கு முன்னாடி நான் வீட்டுக்கு போய் இங்க நடந்தது எதுவுமே தெரியாத மாதிரி பச்சையா நடிக்க போறேன். அம்மா உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன் மன்னிச்சிடுடா என்று சொல்லி ராஜியிடம் நீ கவலைப்படாத எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று சொல்லி கண்ணீருடன் அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

வரும் வழியில் கோமதி காரை நிறுத்தி பாதி வழியில் மீனாவிடம் இனி நடக்கப்போவது என்னன்னு தெரியல எனக்கு ஒரே பதட்டமா இருக்கு என்று பயப்பட மீனா இதுவரைக்கும் நான் உங்களுக்கு எப்படி துணையா இருந்தேனோ அதே மாதிரி இதுக்கு அப்புறமும் இருப்பேன். இங்கு நடந்த எந்த விஷயத்தையும் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறார்.

மறுபக்கம் கதிர் ஒரு பக்கம் ராஜு ஒரு பக்கம் என உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யா செல்வி, அமிர்தா ஆகியோரை ஊருக்கு அனுப்பிவிட்டு இவர்களுடன் கிளம்பி குன்னக்குடிக்கு வருகிறார்.

வீட்டுக்கு வந்த கோமதியிடம் கதிர் எங்கே என்று பாண்டியன் கேட்க பதில் எதுவும் சொல்ல முடியாமல் உள்ளே ஓடிச் சென்று விட மீனா அவங்க அண்ணன் குடும்பத்தை நினைத்து கவலையில் இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார். பிறகு கதிர் குறித்து கேட்க மதுரை வரைக்கும் எங்க கூடத்தான் வந்தான் ஏதோ யுனிவர்சிட்டி வரைக்கும் போய்ட்டு வரணும் முக்கியமான வேலை இருக்குன்னு கேட்டான் நாங்க தான் போயிட்டு வர சொல்லி வந்தோம் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இருந்தாலும் பாண்டியன் விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க மீனா ஒரு வழியாக சமாளிக்கிறார். பிறகு பழனி கோமதியிடம் ராஜி குறித்து பேசி வருத்தப்பட இவர் அவ எங்கிருந்தாலும் நல்லபடியா தான்டா இருப்பா என்று வாய் விட்டு விட மீனா சூழ்நிலையை சமாளிக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து செந்திலுக்கு சந்தேகம் வந்து மீனாவை கூட்டிப் போய் கதிர் எங்கே என்று கேட்க அவர் பாண்டியனிடம் சொன்ன விஷயத்தை சொல்லி செந்திலை ஆப் செய்கிறார். அதன் பிறகு கோமதி தோட்டத்து வழியாக சென்று தன்னுடைய அம்மாவை பார்க்க அவர் கோமதி ஓடிப்போன விஷயத்தை சொல்லி அதேபோல் இந்த ராஜியும் ஓடி போயிட்டாலே என்று கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial-episode-update
baakiyalakshmi-serial-episode-updatebaakiyalakshmi-serial-episode-update