baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியாவும் செழியனும் கோர்ட்டில் வந்து காத்துக் கொண்டிருக்க எழிலும் அங்கு வருகிறார். பாக்கியா நீ எதுக்குடா இங்க வந்த என்று கேட்க செழியனுக்கு ஒரு சப்போட்டா இருக்கலாம் என்று தான் வந்ததாக சொல்கிறார்.
அதன் பிறகு ஜெனி மற்றும் ஜோசப் இருவரும் வர ஜெனியை பேசவிடாமல் ஜோசப் உள்ளே கூட்டிச் செல்ல எழில் தடுத்து நிறுத்து ஜெனியை நலம் விசாரிக்கிறார். பிறகு ஜோசப் இப்போ அவளை பத்தி கேட்பேன் அப்புறம் குழந்தையை பத்தி கேட்ப அப்புறம் அண்ணனுக்கு சப்போர்ட்டா பேசுவேன் என்று கோபப்பட நான் அண்ணனுக்காக பேசல என்னுடைய ஸ்கூல் சீனியர் என்ற முறையில் தான் பேசினேன் என்று பதில் கொடுக்க ஜோசப் ஜெனியை கூட்டிக்கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.
மேலும் ஜெனியிடம் உன்னை பத்தி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சொல்லுவாங்க அது பத்தி எல்லாம் நீ கவலைப்படாத நமக்கு விவாகரத்து கிடைக்கணும் என சொல்கிறார். பிறகு ஜெனி மற்றும் செழியனை நீதிபதி விசாரணைக்கு அழைக்க ஜெனி தரப்பு வழக்கறிஞர் செழியன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
பிறகு நீதிபதி உன் மேல இவ்வளவு குற்றச்சாட்டுகள் வைக்கிறாங்க நீ என்னப்பா பதில் சொல்ல போற என்று கேட்க செழியன் நான் நிறைய தப்பு பண்ணிட்டேன். ஜெனி என் கூட இருக்கிற வரைக்கும் அவளோட அருமை எனக்கு புரியல என கண் கலங்குகிறார். அவங்க மேல உனக்கு ஏதாவது குற்றச்சாட்டு இருக்கா என்று கேட்க எதுவும் இல்லை அவளை மாதிரி ஒரு நல்ல பொண்ணு யாருக்கும் கிடைக்க மாட்டாங்க, எனக்கு கிடைச்சாங்க என ஜெனி குறித்து பாசிட்டிவ்வாகவே சொல்ல ஜெனி அப்பா சொன்ன விஷயங்களை நினைத்து பார்க்கிறார்.
அதன் பிறகு நீதிபதி இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைப்பதாக தீர்ப்பு வழங்குகிறார். மேலும் இருவரும் கவுன்சிலிங் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார். அடுத்ததாக ஜெனி காரில் காத்திருக்க ஜோசப் வழக்கறிஞரை பார்க்க போக இந்த சமயத்தில் எழில் ஒரு பிளான் போட்டு செழியனை ஜூஸ் குடிக்க கூட்டிச் சென்று ஜெனி காரில் தான் இருக்காங்க அதுவும் தனியா இருக்காங்க நீ போய் கார் எடுத்துட்டு அவங்க எங்கயாச்சும் கூட்டிட்டு போய் பேசு இந்த வாய்ப்பை விட்டா உனக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைக்காது என சொல்ல செழியன் வேண்டாம் என சொல்ல எடுத்து சொல்லி புரிய வைத்து காரில் ஏற வைக்க ஜெனி பதறுகிறார்.
ஜெனி நீங்க எதுவும் பேசாதீங்க செழியன் பேச வேண்டியதை பேசுவான் நீங்க காது கொடுத்து கேட்டா மட்டும் போதும் என சொல்லி இருவரையும் அனுப்பி வைத்துவிட்டு பாக்கியாவிடம் வந்து விஷயத்தை சொல்ல ஜெனி உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும் என எழிலை திட்ட ஜோசப் கோர்ட்டில் இருந்து வெளியே வர பாக்யா பேச்சை அடக்கிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…