Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை வீட்டிற்கு கூப்பிட வரும் கோபி.. என்ன செய்யப் போகிறார் பாக்யா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டில் உள்ளவர்கள் இனியா பற்றி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி ராதிகாவை பார்த்து பேசி விட்டு வீட்டிற்கு வர அவரை கூப்பிட்டு இனியா ரொம்ப அழுதுகிட்டு இருக்க அவ அம்மா வேண்டும், இப்பவே பார்க்கணும் என விடாமல் அழுகிறாள். அவள் அழுவதை எங்களால் பார்க்க முடியவில்லை.

நீ பண்ணது சரி தப்புன்னு நான் பேச வரல பாக்யாவை போய் நீ கூட்டிட்டு வா. தப்பு பண்ணது நீ தான் நீ தான் பொய் அவளிடம் மன்னிப்பு கேட்டு கூப்பிட வேண்டும். உனக்காக இல்லனாலும் உன்னுடைய பொண்ணு இனியாவுக்காக கூப்பிட்டு வா என கையெழுத்துக் கொண்டு கேட்டுக்கொள்கிறார். இதனால் கோபி சரி உங்களுக்காக இனியாவுக்காக நான் போய் அவளை கூட்டிட்டு வரேன் என கோபி கிளம்புகிறார்.

அதன் பிறகு தன்னுடைய நண்பரை சந்தித்து எனக்கு ராதிகாவோட வாழனும். பாக்கியா பத்தி எல்லாம் எனக்கு கவலையே இல்ல. ஆனால் என் பொண்ணு ரொம்ப வருத்தப்படுற அவளுக்காக இப்போது பாக்யாவை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர வேண்டும். அதன் பிறகு ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்து இந்தா டிவேர்ஸ் என பாக்கியவுடன் கொடுத்துவிட்டு ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்வேன் இதுதான் என்னுடைய திட்டம் என கோபி கூறுகிறார்.

அதன் பிறகு பாக்கியா தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று கோபி வீட்டில் எல்லோரும் நீ வரணும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. கிளம்பி வா வீட்டுக்கு போகலாம் என கூப்பிடுகிறார். நான் செஞ்சது தப்புதான் அது எல்லாரும் முன்னாடியும் ஒத்துக்கிட்டேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன் என்று சொல்லிட்டேன் ஆனா நீ இங்க வந்து உட்கார்ந்துகிட்டு ஒவ்வொருத்தரா கூப்பிட்டு நீ வர மாட்டேங்குற. நீ இந்த வீட்டுக்கு எவ்வளவு முக்கியம் என்று நிரூபிக்க பாக்குறியா? இல்ல ஓவருத்தடா உன்னை தேடி வந்து கூப்பிடனும்னு அவங்கள அலைய வைக்க காத்துகிட்டு இருக்கியா என கோபி பேசுகிறார்.

மேலும் உன்கிட்ட நான் சரண்டர் அடைய வரல எனவும் கூறுகிறார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் நான் எந்த நம்பிக்கையில அந்த வீட்டுக்கு வர்றது? இதுவரைக்கும் தெரியாம செஞ்ச தப்ப இனி தெரிந்து செய்ய மாட்டீங்கன்னு என்ன உத்தரவாதம்? என கேட்க கோபி சத்தியம் செய்து தரும் போது இனி என் வாழ்க்கையே நீதான் ராதிகா என சொல்கிறார்.

 baakiyalakshmi serial episode-update

baakiyalakshmi serial episode-update