தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கோபி யாருக்கும் தெரியாம ஸ்டெடியா வீட்டுக்குள்ள போயிடு என உள்ளே பூனை போல் பம்பி நடந்து வருகிறார்.
ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில் கோபி நைசாக மேலே செல்ல முயற்சி செய்ய ஈஸ்வரி வா கோபி வந்து உட்காரு என கூப்பிட கோபி வேற வழி இல்லாமல் சென்று ஷோபாவில் உட்காருகிறார். ஈஸ்வரி ஏதேதோ கேள்வி கேட்க கோபி குடித்தது தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறார்.
இதை பார்த்து ராமமூர்த்திக்கு சந்தேகம் வருகிறது. ராதிகா வந்து வாங்க டிபன் எடுத்து வைக்கட்டுமா என்று கேட்க கோபி அப்போதும் வாய் திறக்காமல் சைகையில் பேச குடிச்சிட்டு வந்திருக்கீங்களா என ராதிகா சைகையில் கேட்கிறார்.
அம்மாவிடம் தொண்டை வலி என்று சொல்லி சமாளிக்க தொண்டை வலிக்கு சுடு தண்ணி வச்சு அதுல கல் உப்பு போட்டு குடித்து ககககக பண்ணனும் என கூறுகிறார். ராதிகா மேல வாங்க என்று கூப்பிட ஈஸ்வரி கொஞ்ச நேரம் இங்கே உட்காரட்டும் என்று உட்கார வைக்கிறார். திரும்பவும் மேல வாங்க என்று சொல்ல கோபி எழுந்து கொள்ள அவ கூப்பிட்டதும் நீ போயிடனுமா என்று திட்டி உட்கார வைக்கிறார் ஈஸ்வரி.
ராதிகா கண்ணசைவில் கோபியை மேல வாங்க என்று கூப்பிட கோபி எடுத்துச் செல்ல அவ கண்ணசைவுக்கு நீ ஆடினா என்ன அர்த்தம் அப்படி இருக்கக்கூடாது என மாறி மாறி கோபியை பந்தாடுகின்றனர். பிறகு ராதிகா மேலே சென்றதும் கோபி நான் தாய் சொல்ல தட்ட மாட்டேன் என்று சுடுதண்ணி வைக்க கிச்சனுக்கு செல்கிறார்.
எந்த பாத்திரத்தில் சுடுதண்ணி வைக்கிறது என தெரியாமல் தடுமாறும் கோபி பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து போர்வெல் வாட்டரை பிடித்து கேஸ் ஸ்டவ்வில் வைக்க செல்வியும் பாக்கியாவும் அதை பார்த்து என்ன நடக்குது என தெரியாமல் நிற்கின்றனர்.
ஒரு பக்கம் தண்ணீரை வைத்துவிட்டு இன்னொரு பக்கம் அடுப்பை பத்த வைத்து என்ன தண்ணீர் சூடே ஆகல என கோபி தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருக்க அங்கு வந்த ராதிகா என்ன பண்றீங்க என்று கேட்க ரொம்ப நேரமா தண்ணி வச்சிருக்கேன். ஆனால் சூடே ஆகல என்று சொல்ல இங்க வச்சா தானே சூடாகும் என கையை தூக்கி எறியும் கேஸ் ஸ்டவ்வில் காட்ட கோபி நான் தண்ணி அங்க வச்சிருக்கேன் அடுப்பு இங்கே எரியுது இந்த கேஸ் ஸ்டவ் லூஸ் ஆயிடுச்சு போல என சொல்ல மேல வாங்க என இழுத்துச் செல்கிறார்.
மேலே கூட்டிச்சென்ற ராதிகா எதுக்கு இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்கறீங்க அதுவும் பாக்கியா முன்னாடி என சண்டை போடுகிறார். இல்ல ராதிகா என் சிட்டுவேஷன் அப்படி என்று சொல்ல அப்படி என்ன சிட்டுவேஷன் என்று கேட்க ரொம்ப சேட் சிட்டுவேஷன் என்ன கூறுகிறார்.
அதைத்தான் என்னன்னு சொல்லுங்க என்று ராதிகா கேட்க அதை எப்படி சொல்றதுன்னு தெரியல என்று கோபி புலம்ப எந்த வாயால குடிச்சீங்களோ அந்த வாயால சொல்லுங்க என ராதிகா கோபப்படுகிறார். பிறகு கோபி என் புள்ளைங்க நிலைமையை நினைச்சு கஷ்டமா இருந்துச்சு அதான் குடிச்சேன் என்று சொல்ல இப்ப எல்லாம் சரியாகிடுச்சா என கேள்வி கேட்டு திட்டுகிறார். பேசாமல் படுத்து தூங்குங்க என்று கோபியை பிடித்து தள்ளிவிட்டு ராதிகா வெளியே வர இவளுக்கு மட்டும் ஆபீஸ் க்ளோஸ் ஆன விஷயம் தெரிஞ்சா எனக்கு சங்கு தான் என புலம்புகிறார் கோபி.
அடுத்ததாக ஜெனி தண்ணீர் எடுத்துக்கொண்டு ரூமுக்குள் செல்ல குப்பைத் தொட்டியில் ஏதோ பொக்கே இருப்பதை கவனித்து அதை எடுக்க சாரி ஃபிரம் செழியன் என ஒரு லெட்டர் கிழித்து போட்டு இருப்பதை பார்த்து அதை ஓட்ட வைத்து படிக்க முயற்சி செய்ய அங்கு வரும் ஜோசப் அதை எடுத்து என்ன பண்ற என திட்டுகிறார்.
செழியன் ஏதோ அனுப்பி இருக்கிறான் அது என்னன்னு நான் படிக்க வேண்டாமா என்று லெட்டரை கேட்க ஜோசப் அதை கிழித்து போட்டு எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என கோபப்படுகிறார். அந்த லெட்டரில் என்ன இருக்கிறது என்று படிக்க முடியாமல் அழுகிறார் ஜெனி.
மறுநாள் பாக்யாவும் ராமமூர்த்தியும் வாக்கிங் வரும்போது கோபியும் வாக்கிங் வந்திருக்க ராமமூர்த்தி அவரிடம் சென்று முதல்ல குடிக்கிறதை நிறுத்து வீட்ல அவ்வளவு பிரச்சனை இருக்கு இதுல நீ வேற புதுசா பிரச்சனை பண்ணாத என திட்டுகிறார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பாக்யா ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கும் விஷயத்தை கேள்வி பட்டதாக சொல்லி வாழ்த்து கூறுகின்றனர். நீங்க பெரிய ஆள் ஆகிட்டீங்க என பாக்யாவுக்கு கை கொடுத்து பாராட்ட கோபி ஷாக் ஆகி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
