தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் கோபி மற்றும் ஈஸ்வரி வக்கீலை பார்த்து பேசி விட்டு வரும்போது எதிரே ஜோசப் வர ஈஸ்வரி அவரிடம் சண்டை போட்டு வாக்குவாதம் செய்கிறார். செழியன் கண்டிப்பா விவாகரத்து கொடுக்க மாட்டான் அப்படியே விவாகரத்து கொடுத்தாலும் குழந்தை எங்க கிட்ட தான் இருக்கும் என்று சவால் விட்டுவிட்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் கணேஷ் போலீச கூட்டிட்டு நேரா வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்று முடிவெடுத்து நிற்க வெளியே வரும் கான்ஸ்டபிள் ஒருவர் என்ன விஷயம் என்று கேட்க என் பொண்டாட்டியும் பிள்ளையையும் கடத்தி வச்சிருக்காங்க என்று கூறுகிறார். பிறகு இன்ஸ்பெக்டர் இடம் சென்று நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல அவர் கான்ஸ்டபிள் ஒருவரை அனுப்பி வைக்கிறார்.
கணேஷ் இவரையா அனுப்புறிங்க என்று கேட்க அவர் ரொம்ப அனுபவசாலி நிறைய கேஸ் பார்த்து இருக்காரு அவரு இதை தீர்த்து வைத்து விடுவாரு என்று சொல்லி அனுப்ப கணேஷ் திரும்பத் திரும்ப தன்னுடைய கதையை பற்றி சொல்ல அந்த கான்ஸ்டபிள் கடுப்பாகிறார்.
ஒரு காபி குடிச்சிட்டு போலாமா என்று கேட்க சார் முதல்ல என் அமிர்தாவையும் குழந்தையும் என்கிட்ட மீட்டு கொடுத்துடுங்க நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன் என்று சொல்கிறார். இங்கே வீட்டில் கோர்ட்டில் நடந்த விஷயம் பற்றி எழில், ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் பேசிக் கொண்டிருக்க கணேஷ் வந்து நிற்க அதிர்ச்சி அடைகின்றனர்.
உன்ன தான் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கோம்ல வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கின்றனர். ஈஸ்வரி எழிலிடம் நீ போலீசுக்கு போனை போடு என்று சொல்ல கணேஷ் நானே போலீஸோட தான் வந்திருக்கேன் சார் வாங்க என்று கூப்பிட்ட கான்ஸ்டபிள் வந்து நிற்க இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
வண்டியில வந்தது இடுப்பெல்லாம் வலிக்குது, குண்டும் குழியுமான ரோட்டில் ஓட்டிட்டு வந்தான் உக்காந்து பேசலாமா என்று சொல்லி கான்ஸ்டபிள் வந்து உட்காருகிறார். பாக்யா சார் காபி குடிக்கிறீங்களா என்று கேட்க குடிச்சா நல்லா தான் இருக்கும் என்று கான்ஸ்டபிள் சொல்ல செல்வி காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். காபி வாசனையே செமையா இருக்கு இந்த மாதிரி வாசனையை பார்த்ததே இல்லை. காபி பவுடர் எங்கே வாங்குறீங்க என்று கேட்க பாக்யா நாங்க வீட்டிலேயே அறைப்போம் என்று சொல்ல செல்வி நாங்க கேட்டரிங் நடத்துகிறோம் என கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து கணேஷ் சார் என் விஷயத்தை விசாரிங்க என்று சொல்ல உங்களுக்கும் அமிர்தாவுக்கும் எப்படி கல்யாணம் நடந்துச்சு நீங்க அவங்களை எப்படி பார்த்தீங்க என்று கேட்க எழில் நடந்தவற்றை சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி இரண்டு பேரும் வீட்டிற்கு தெரிந்துதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க திடீர்னு இவன் வந்து அமிர்தா வேணும் குழந்தை வேணும்னு கேட்டா எப்படி அது சாத்தியம் என்று கேட்கிறார்.
அதன் பிறகு கான்ஸ்டபிள் அமிர்தாவை கூப்பிட்டு எனக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் அது பத்தி நான் பேச வேண்டாம் நீ கணேஷ் கூட போக விருப்பப்படறியா இல்லையா அது மட்டும் சொல்லு என்று கேட்க அமிர்தா என்ன சொல்ல போகிறார் என்ற பில்டப் உடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
