Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணேஷ் கொடுத்த ஷாக். கலங்கி அழும் அமிர்தா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டில் ஈஸ்வரி உடனே எழுந்து போன் போடு என்று சொல்ல பாக்கியா போன் போட முயற்சி செய்ய அமிர்தாவின் அம்மா வந்து நிற்கிறார்.

பதற்றோடு வீட்டுக்குள் ஓடி வந்தவர் அமிர்தாவை கூப்பிட அமிர்தா இங்கே இல்லை என்று சொல்ல அமிர்தாவை வீட்ட விட்டு அனுப்பிட்டீங்களா அவை எந்த தப்பும் பண்ணல என்று சொல்ல அமிர்தாவுக்கும் எழிலுக்கும் இந்த விஷயம் தெரியாது அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க என்று கூறுகின்றனர்.

அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்ல போறீங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிற அமிர்தா மற்றும் எழில் வீட்டிற்கு வருகின்றனர். அம்மாவை பார்த்ததும் அமிர்தா ஓடி வந்து கட்டிபிடித்து கதற எனில் கலங்கி நிற்பதை பார்த்து பாக்கியா என்னாச்சு என்று கேட்க கணேசை நாங்க பார்த்தோம் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் கணேஷ் குடும்பமும் வீட்டிற்கு வர மொத்த பேரும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். பாக்யா ஒரு மாதம் டைம் கேட்ட விஷயத்தையும் சொல்கின்றனர். கணேஷ் எனக்கு என் அமிர்தாவும் என் குழந்தையும் வேண்டும் என்று சொல்ல அமிர்தாவின் அம்மா செத்துப்போனவன் செத்துப் போனவனாவே போக வேண்டியது தானே? திரும்ப எதுக்கு வந்து என் பொண்ணோட வாழ்க்கையில மண் அள்ளி போடுற என கோபப்படுகிறார்.

ஈஸ்வரி எழில் வாழ்க்கையில் நடப்பதை நினைத்து கலங்க எழில் அழாதீங்க பாட்டி என ஆறுதல் சொல்ல அமிர்தா எனக்கு இப்படியெல்லாம் நடக்கும்னு சத்தியமா தெரியாது என காலில் விழுந்து கதறுகிறார். எழில் அமிர்தாவை எழுப்பி கண் துடைத்து சமாதானம் செய்ய கணேஷ் அமிர்தா மேல இருந்து கையை எடு என சத்தம் போடுகிறார்.

எல்லோருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க ஒரு கட்டத்தில் கணேஷ் யாரும் எதுவும் பேச வேண்டாம் அமிர்தாவிடம் நான் பேசிக்கிறேன் என்று பேச தொடங்க அமிர்தா என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற பில்டப்புடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update