Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவிற்கு தெரிய வந்த உண்மை. கோபி எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் இன்றைய எபிசோட்டில் பேங்கில் இருந்து வந்தவர்கள் கோபி கூடிய சீக்கிரம் பணம் கட்ட வேண்டும் என்று எச்சரித்து விட்டு செல்ல ராதிகாவிற்கு மொத்த உண்மையையும் தெரிய வருகிறது.

ஆனால் ஈஸ்வரி நீ அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் அவன் எல்லாத்தையும் சரி பண்ணிடுவான் என்று சொல்கிறார். அவர் பிசினஸையே அவரால பாக்க முடியல இதுல மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லிட்டு இருக்காரு என ராதிகா ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி கோபிக்கு போன் பண்ணி உடனே வீட்டுக்கு வா என்று கூப்பிட கோபி வரும்போது ராதிகா மற்றும் ஈஸ்வரி என இருவரும் சோபாவில் எதிராக முறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கின்றனர். கோபி வந்ததும் ராதிகா எழுந்து சென்று விட ஏதாவது பிரச்சனையாமா என்று கேட்க பேங்கில் இருந்து வந்திருந்தாங்க என்று சொன்னது கோபி ராதிகாவுக்கு விஷயம் தெரிஞ்சிருச்சா என்று கேட்கிறார்.

ஈஸ்வரி ஆமாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து பிறகு ராதிகாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். பில்லு கட்ட மறந்துட்டேன் என்று சொல்லி சமாளிக்க ராதிகா மறந்து விட்டேன் என்று பொய் சொல்லாதீங்க என்று கோபப்படுகிறார். பிறகு கோபி அப்செட் ஆக உட்கார்ந்து இருக்க ஈஸ்வரி நகையை கொண்டு வந்து கொடுத்து இதை விட்டோ அல்லது அடமானம் வைத்து முதலில் கடனை அடைத்து என்று சொல்லிக் கொடுக்க ராதிகா பேங்க் செக் எடுத்து வந்து கொடுத்து இத வச்சி கடன் அடைச்சிடுங்க என்று சொல்ல கோபி இரண்டு பேரும் எதுவும் செய்ய வேண்டாம் இது என்னால வந்த பிரச்சனை நானே சரி செய்கிறேன் என்று கிளம்பி செல்கிறார்.

அடுத்து பாக்கியா கேன்டினில் வியாபாரம் ஜோராக நடக்க நாட்களும் கடந்து செல்கிறது. ஒன்பது நாட்கள் வெற்றிகரமாக கேன்டீன் நடந்து முடிய வீட்டுக்கு வந்த பாக்கியா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்து வியாபாரம் பிச்சுகிட்டு போகுது பெரிய அளவில் லாபம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து எழுந்து ராதிகா பக்கத்தில் சென்று உட்கார்ந்து விடுகிறார்.

நிறைய பேர் டீலிங் பேசுவதற்காக கேட்கிறார்கள் என்று சொல்ல கோபிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்கிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode-update
baakiyalakshmi serial episode-update