Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியா சொன்ன வார்த்தை, ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 31-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலில் இருப்பதால் அப்பா தான் பழியை ஏத்துக்கிட்டார்களா நம்ம இதுக்கப்புறம் இங்க இருக்கறதுல எந்த பிரயோஜனமும் இல்லை என்று சொல்லிவிட்டு முடிவெடுக்க பாக்யாவும் நானும் இது தான் நினைச்சேன் நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல இனியா இப்பவே போகலாம் என்று சொல்லுகிறார். வேண்டாம் இந்த நைட்ல போக வேணாம் காலைல கிளம்பலாம் என்று சொல்லுகிறார். பாட்டி எப்படி இருக்காங்க என்று பாக்கியா கேட்க செல்வி ஆன்ட்டியும் ஆகாஷ்சும் பாத்துக்குறாங்க என்று சொல்லுகிறார்.

மறுநாள் காலையில் செல்வி ஈஸ்வரிக்கு காபி கொடுக்க வேண்டாம் என சொல்லுகிறார்.ஆகாஷ் வெளியே நின்று கொண்டிருக்கிற செல்வி வீட்டுக்கு போக சென்று சொல்ல அந்த நேரம் பார்த்து பாக்யா பசங்களுடன் வந்து இறங்க உள்ளே சென்று ஈஸ்வரியிடம் பேசுகின்றனர் அவர் அழுது கொண்டே இருக்க இனியாவும் அழுகிறார். பிறகு பாக்கியா நானும் எழில் செழியன் மூவரும் சென்று அவரை பார்த்துட்டு வரோம் என்று சொல்ல ஈஸ்வரி மற்றும் இனியா இருவரும் நானும் வரேன் என்று சொல்லுகின்றன. ஆனால் அவர்கள் நீங்க வர வேணாம் அங்க என்ன பிரச்சனை நடக்குதுன்னு தெரியாது நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லி கோபியை பார்க்க வருகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் கோபி இருக்கும் நிலைமையை பார்த்து மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் உங்கள அடித்தார்கள் அப்பா என்று கேட்ட அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க அமைதியா இருங்கடா என்று சொல்லி எழில் போலீஸ் இடம் சண்டை போடுகிறார் கொலைகார குடும்பத்துக்கு இவ்வளவு வாயா என்று கேட்க பிறகு கோபி அமைதியாக இருக்க சொல்லுகிறார்.

இப்போதைக்கு கோவப்படாதீங்க நான் சொல்றது மட்டும் கேளுங்க நம்ம வீட்டுக்கு போலீஸ் இன்ஸ்பெக்ஷன் வருவாங்க அப்போ நான் தான் கொலை பண்ணதாகவோ நிதிஷ் சாவறதுக்கு ஒரு நாள் முன்னாடியே நீங்க வெளியே போயிட்டுதாகவும் தான் நான் சொல்லி இருக்கேன் அதே மாதிரி நீங்களும் சொல்லிடுங்க அப்பதான் நம்ம குழந்தையை காப்பாற்ற முடியும் என்று நினைத்து கவலைப்படாத பாக்யா நீ நம்ம குழந்தைகளை பார்த்துக்கொள் என்று சொல்ல அனைவரும் கண்கலங்குகின்றனர். பிறகு அனைவரும் வீட்டுக்கு வந்து விடுகின்றனர்.

ஈஸ்வரிடம் விஷயத்தை சொல்ல அவர் என்னால் அப்படி சொல்ல முடியாது என்று கண்கலங்கி அழ எழில் மற்றும் செழியன் எங்களாலையும் முடியாதுதான் ஆனால் இனியாவை காப்பாத்த நம்மளுக்கு வேற வழி இல்ல பாட்டி எப்படியாவது உண்மையை கண்டுபிடித்து நம் அப்பாவ வெளிய எடுத்துட்டு வந்துடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே போலீஸ் வந்து விடுகின்றனர் இனியா போலீஸ் கேள்விக்கு பயப்பட்டு பேசுவது பார்த்து ஈஸ்வரி ஆமா நாங்க பல நடக்கிறதுக்கு முன்னாடி நாள் தான் போனோம் என்று கோபி செல்ல விஷயங்களை சொல்லி விடுகிறார் இனிமேல எங்கேயும் வெளியே போகக்கூடாது நாங்க எப்பவும் விசாரணைக்கு கூப்பிட்டாலும் வந்துவிடும் என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் எழில் சிசிடிவி புட்டேஜ் எடுத்து கொண்டு வர என்ன நடக்கிறது?என்ன பேசுகின்றனர்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 31-07-25