பாக்யா எடுத்த முடிவு. அதிர்ச்சியில் இனியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வரும் பாக்கியாவை பழனிச்சாமி இப்பதான் மேடம் ரொம்ப பிசி, முன்ன எல்லாம் கிளாஸ் ஸ்டார்ட் ஆகிறதுக்கு முன்னாடியே வந்துடுவாங்க கிளாஸ் முடிஞ்சு கொஞ்ச நேரம் இருந்துட்டு டீ காபி சாப்பிட்டு போவாங்க ஆனா இப்ப எல்லாம் உடனே கிளம்பிடுறாங்க என்று பேசுகிறார்.

பாக்கியா என்ன சார் பண்றது ஏதாவது ஒரு வேலை வந்துகிட்டே இருக்கு நேத்து பேங்குக்கு லோன் விஷயமா போய் இருந்தேன் என்று சொல்கிறார். ஆனால் லோன் டிகிரி முடித்து இருந்தால் தான் கொடுப்பேன்னு சொல்லிட்டாங்க என்று கூறுகிறார். மேலும் அமிர்தா அல்லது ஜெனி பெயரில் லோன் எடுக்கலாம் என்று இருப்பதாக சொல்ல எதுக்கு அப்படி எடுக்கணும், நீங்களே ஒரு டிகிரி படித்து முடித்துவிடலாம் என்று கூறுகிறார்.

நாளைக்கு அவங்க ஏதோ ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்றாங்க அப்படின்னா உங்களுக்காக வாங்கின லோன் அவங்களுக்கு தொந்தரவா இருக்கக்கூடாது என்று சொல்ல பாக்கியா யோசிக்கிறார். அடுத்ததாக இனியா படிக்கும் காலேஜ் வெளியே உட்கார்ந்து இருக்கும் பாக்யா எழிலுக்கு போன் செய்து வர சொல்கிறார்‌.

எழிலிடம் காலேஜ் படிக்க வேண்டும் என்று தனது ஆசை பற்றி சொல்ல அவர் அப்படின்னா நீ படி என்று சொல்ல பாக்யா அதெல்லாம் செட் ஆகாது நான் ஏதோ ஒரு ஆர்வத்துல உனக்கு போன் பண்ணிட்டேன் வா போகலாம் என்று கூறுகிறார். பாக்யாவை உட்கார வைக்கும் எழில், உனக்கு பிடிக்கும்னா நீ தாராளமா படி, உன்னால கண்டிப்பா முடியும் என்று ஊக்கப்படுத்தி காலேஜ் அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கி வந்து பில்லப் செய்து பாக்கியாவிடம் கையெழுத்து வாங்கி காலேஜில் சேர்த்து விடுகிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பாக்யா காலேஜில் சேர்ந்த விஷயத்தை எப்படி சொல்வது என தெரியாமல் முழிக்கிறார். பிறகு இன்னைக்கு பேப்பர் பாத்தீங்களா ஒரு ஊர்ல அம்மாவும் பையனும் ஒரே காலேஜ்ல படிக்கிறார்களாம் என்று சொல்ல செழியன், இனியா ஆகியோர் இதெல்லாம் சாத்தியமே கிடையாது என்று சொல்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஒரு பாட்டி 108 வயசுல படிச்சு எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி இருக்காங்க என்று பாக்யா சொல்ல செழியன் அந்த வயசுல எக்ஸாம் எழுதி என்ன பிரயோஜனம் என்று கேட்கிறார். இருக்கிறது ஒரு வாழ்க்கை புடிச்ச மாதிரி வாழனும் என்று பாக்கியா சொல்கிறார்.

இருந்தாலும் காலேஜ் போக போறது பற்றி சொல்லாமல் இருக்க எழில் நானே சொல்கிறேன் என்று பாக்யா காலேஜில் சேர்ந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். ராமமூர்த்தி இருக்கிற வேலையில உன்னால எப்படி மா காலேஜ் போய் படிக்க முடியும்? என்று கேட்க என்னால முடியும் மாமா, ஆனா உங்களுக்கு பிடிக்கலன்னா நான் போகமாட்டேன் என்று பாக்கியா சொல்ல இந்த குடும்பத்துக்காக நீ எவ்வளவோ செஞ்சிருக்க, நீ ஆசைப்பட்ட மாதிரி போய் படி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்ல பாக்யா சந்தோஷப்படுகிறார். இனியா எந்த காலேஜ் என கேட்க உன்னுடைய காலேஜ் தான் என்று சொல்ல ஷாக் ஆகிறார்.

பாக்யாவுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்ல இனியா மட்டும் அதிர்ச்சியில் அப்படியே இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 31-07-23
jothika lakshu

Recent Posts

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

25 minutes ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

3 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

4 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

5 hours ago

அசோகன் சொன்ன வார்த்தை, ஷாக்கான சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

19 hours ago