ரோகினி போட்ட பிளான். மீனாவின் குடும்பத்தை திட்டிய விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா மற்றும் அண்ணாமலை என இருவரும் சொன்ன வார்த்தைகளால் மீனா என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க அப்போது ரோகினியின் அம்மா மீனாவுக்கு போன் செய்கிறார்.

கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சா என்று விசாரிக்கும் அவர் அந்த பொண்ணு கூடவே இரு, பாவம் அவங்க வீட்டுல யாருமே கூட இருக்க மாட்டாங்க என்று சொல்ல மீனா ஆமா அவங்க அப்பா மலேசியாவில் இருக்காரு, அவங்க அம்மா இறந்து போயிட்டாங்க என்று சொல்ல இவர் கலங்கி நிற்கிறார்.

அடுத்ததாக ரோகிணி ரெடியாகி வெளியே வர மனோஜ் கோபமாக நின்று கொண்டிருக்க ரோகிணி மனோஜ் விஷயத்தைக் கேட்டு தான் கோபமாக இருப்பதாக நினைத்து உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையா? இல்ல நான் இப்போவே கிளம்பி போயிடவா என்று கேட்க எதுக்கு போகணும் கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் ஒன்னா தானே போகணும் என்று மனோஜ் சொல்ல ரோகினி குழப்பம் அடைகிறார்.

நான் போன்ல சொன்னது எதையும் நீ கேட்கலையா என்று கேட்க மனோஜ் எங்க முழுசா கேட்ட? அதற்குள் அப்பா வந்து போனை பிடுங்கிட்டாரு என்று பிளாஷ்கட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு ரோகினி மனோஜிடம் விஷயத்தை சொல்ல போகும் போது பாட்டி வந்து விடுகிறார். அடுத்ததாக மீனாவின் அம்மாவும் அங்கு வந்து இந்த புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு, நீயும் பார்க்க ரொம்ப அழகா இருக்க என்று சொல்வது மட்டுமல்லாமல் உன்னுடைய அப்பா கிட்ட கல்யாண விஷயம் பற்றி பேசுனியா என்று கேள்வி கேட்கிறார். மேலும் வீடியோ கால் மூலமாகவே அவர் இந்த கல்யாணத்தை பார்க்கிற மாதிரி பண்ணு என்று சொல்ல பாட்டியும் சந்திரா சொல்வது சரி தான் என்று கூறுகிறார்.

இதனால் ரோகிணி என்ன செய்வது என தெரியாமல் நின்று கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து அங்கே விஜயா வர ரோகிணி இந்த நேரம் பார்த்து எதுக்கு எங்க அப்பாவ ஞாபகப்படுத்தனும் என அடுத்து டிராமா போட அவர் மீனாவையும் மீனாவின் குடும்பத்தையும் திட்டி ரோகிணி கிட்ட இனிமே பேசவே கூடாது என எச்சரிக்கிறார்.

பாட்டி சந்திராவை அழைத்துக் கொண்டு சென்றதும் விஜயா மீனாவை கூப்பிட்டு நீயும் உங்க அம்மாவும் சேர்ந்து இந்த கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுறீங்களா என பேசுகிறார். மறுபக்கம் பி ஏ காரில் தன்னுடைய நண்பர்களிடம் கல்யாணத்தை நிறுத்த போகும் விஷயத்தைப் பற்றியும் தனக்கு ரூம் ஏற்பாடு செய்ய சொல்லியும் பேசிக் கொண்டு வர கார் டிரைவராக வரும் முத்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ரோகிணி தன்னுடைய தோழி வித்யாவிடம் நீ கோவில் வாசலிலேயே காத்திரு ஒருவேளை அந்த பிஏ வந்தா அவன் உன்ன கைய புடிச்சு இழுத்ததா சொல்லி பிரச்சனை பண்ணி அவன முதல்ல நீ அடிச்சிடு அப்புறம் அக்கம் பக்கத்தில் இருக்கும் எல்லாரும் போட்டு அவன அடிப்பாங்க, அதுக்குள்ள இங்க கல்யாணம் நடந்ததுரும் என புது திட்டத்தை போடுகிறார்.

பிறகு இருவரும் மண மேடையில் வந்து உட்கார ரோகிணி கழுத்தில் மாலை சரியாக இல்லாத காரணத்தினால் மீனா அதனை சரி செய்ய போக அங்கு வரும் விஜயா நீ மாலையை தொடக்கூடாது ஓரமா போய் நில்லு, நீ தொட்டா அந்த தரித்திரம் அவங்களுக்கும் வந்துடும் என அவமானப்படுத்த மீனா கண்கலங்கி அங்கிருந்து வெளியே செல்கிறார்.

ரோகிணி இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற பதட்டத்தில் மண மேடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Sirakadikka Aasai Episode Update
jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

14 hours ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

15 hours ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

16 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

16 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

16 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

16 hours ago