baakiyalakshmi serial episode update 31-01-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை விட்டுவிட்டு கிளம்பி வெளியே வர இனியா ராதிகாவை கட்டிப்பிடித்து அழுகிறார். ராதிகா இனியாவே சமாதானம் செய்து கிளம்ப போக கோபி அவ்வளவுதானா நம்ப ரிலேஷன்ஷிப் என்ன ஆகிறது என்று கேட்க அதற்கு ராதிகா நான் உங்க குடும்பத்துக்கிட்ட தான் விட்டுட்டு போறேன் என்று சொல்ல உடனே மயூ என்று கேட்க அதற்கு ராதிகா நானும் என் பொண்ண எனக்கு பாத்துக்க தெரியும். நீங்க உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருங்க என்று சொல்லிவிட்டு ராதிகா காரில் இறக்கி கிளம்பி விடுகிறார்.
கோபி அமைதியாக வந்து ஹாலில் உட்கார்ந்து ராதிகா ஏன் இந்த முடிவை எடுக்கணும் நேத்து இந்த நேரத்துக்கு நம்ம எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் ஆனால் இப்போ இது மாதிரி ஏன் நடக்குது நேத்து நைட்டு வரைக்கும் ராதிகா மூன்று பேரும் போகலாம்னு தான் முடிவு எடுத்து பேசி இருந்தோம் அப்படி இருக்கும்போது இப்போ அவ மட்டும் ஏன் பிரிஞ்சு போகணும் என்ன நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல என்று ஈஸ்வரியிடம் புலம்ப அதற்கு ஈஸ்வரி சரி விடுப்பா எல்லாமே மாறும் அவளை எனக்கு பிடிக்காது தான் ஆனா அவ போகும்போது எனக்கும் கஷ்டமா தான் இருந்தது என்று சொல்ல கோபி இப்ப நான் என்ன பண்றது என்று தெரியாமல் படபடன்னு வருது என்று சொல்லுகிறார் டென்ஷன் ஆகாத கோபி என்று சொல்ல சரி நான் ரூமுக்கு போகிறேன் என்று சொல்லுகிறார்.
நீ இப்போ தனியா இருக்க வேணா கோபி என் கூடவே இரு என்று ஈஸ்வரி சொல்ல வேண்டாம் எனக்கு கொஞ்சம் தனிமையில் இருக்கணும் என்று சொல்லுகிறார் செழியனே போக சொல்ல யாருமே வர வேணாம் நான் கொஞ்ச நேரம் ரூம்ல இருக்கேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் பாக்கியா ரூமில் கீழே உட்கார்ந்துகொண்டு ராதிகா ரெஸ்டாரன்டில் பீச்சில் நடந்து கொண்டதையும் பேசியதையும் நினைத்து கண்கலங்கி அழுகிறார். அந்த நேரம் பார்த்து செல்வி வர அந்த மேடம் இங்கிருந்து போகும்போது எனக்கு மனசே கலங்கி போச்சு அக்கா அவர் கூட்டிட்டு போவாங்கன்னு பார்த்தா இப்படி விட்டுட்டு போயிட்டாங்களே, போகும்போது கூட சிரிச்சுக்கிட்டே போனாங்க ஆனா அவங்களுக்குள்ள இருக்குற வழி எனக்கு தெரிஞ்சதுக்கா என்று சொல்ல, அவங்க ரொம்ப யோசிச்சு தெளிவா ஒரு முடிவு எடுத்துருக்காங்க அவங்க நினைச்சிருந்தா அவரை கூட்டிட்டு போயிருக்கலாம் யாரும் எதுவும் கேட்டிருக்க முடியாது ஆனா உங்க பையன நீங்களே வச்சுக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாங்க. ஒரு காலத்துல இவரு எனக்கு முக்கியம் நான் இவர் கூட தான் வாழனும் உறுதியா சொன்னவங்க அதுக்கெல்லாம் எவ்வளவு தைரியம் வேணுமோ அதைவிட எதுவுமே வேணாம்னு தூக்கி போறதுக்கு ஒரு தைரியம் வேணும் என்று சொல்லி கண் கலங்குகிறார்.
அவங்க எடுத்த முடிவு ஒரு பக்கம் சரின்னு தோணுது ஆனா இன்னொரு பக்கம் யோசிச்சு முடிவெடுத்து இருக்கலாமா என்று தோணுது என்று சொல்ல செல்வி அவங்க எடுத்தது சரியான முடிவு தானே எனக்கு தோணுது அக்கா என்று சொல்லுகிறார் இதுக்கு அப்புறம் கோபி சார் என்ன பண்ணுவாரு என்று கேட்க, அவர் எப்படி போனால் எனக்கு என்ன என்று சொல்ல உன் மாமியார் என்ன பண்ணனும் என்று கேட்க எனக்கு அதை பத்தி எல்லாம் கவலை இல்லை என்று கோபமாக சொல்லுகிறார். அவங்க என்ன ஆசைப்பட்டாங்க சந்தோஷமான ஒரு வாழ்க்கை தான அதுவே அவங்களுக்கு அமைய மாட்டேங்குது இதிலிருந்து அவங்க எப்படி வெளிய வர போறாங்க மயூக்கு எப்படி ஆறுதல் சொல்ல போறாங்க என்று சொல்லி அழுகிறார்.
மறுபக்கம் ராதிகா வீட்டுக்கு வர ராதிகாவின் அம்மா நீங்க மட்டும் வந்திருக்கீங்க மாப்பிள்ளை எங்க என்று கேட்க ராதிகா இப்போதைக்கு எதுவும் என்கிட்ட கேட்காத நான் உங்கிட்ட அப்புறம் சொல்றேன் என்று சொல்ல, என்ன விஷயம் சொல்லு என்று கேட்க கோபியா உங்க வீட்ல விட்டுட்டு வந்துட்டேன் என்று சொல்லுகிறார். அப்படின்னா என்ன அர்த்தம் அவர் வருவாரா மாட்டாரா என்று கேட்க வரமாட்டார் என்று சொல்லுகிறார். எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு ராதிகா என்று கேட்க அவர அவங்க வீட்ல சந்தோஷமா இருக்கட்டும் இங்க வர மாட்டாரு என்று மீண்டும் சொல்லிவிட்டு நான் உன்கிட்ட தெளிவா அப்புறம் சொல்றேன் எனக்கு டயர்டா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு மயுவை அழைத்து சென்று விடுகிறார்.
கோபி தனியாக ரூமுக்குள் உட்கார்ந்து ராதிகா பேசியதை நினைத்து கண்கலங்க திடீரென்று ஒரு முடிவு எடுத்து கீழே வந்து ஈஸ்வரி இடம் நான் ராதிகாவை பார்க்கப் போகிறேன் என்று சொல்ல ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? அதற்கு செழியன் என்ன கேட்கிறார்? கோபி முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…