தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபியின் அப்பா ராதிகாவை பார்த்து கோபியும் பாக்கியமும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்ட நடந்து செல்கிறார். இந்த பக்கம் அவரை ஆளைக் காணவில்லை என வீட்டில் உள்ளவர்கள் பதறிப் போய் தேட ஆரம்பிக்கின்றனர். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது நீ எங்கேயாவது போய் விட்டாரா என கண்கலங்கி அழுகிறார் ஈஸ்வரி.
கோபியின் அப்பா ராதிகா வீட்டு வரைக்கும் நடக்கிற அளவுக்கு என் உடம்புல தெம்பு கொடு கடவுளே அதுக்கப்புறம் என் உயிரே போனாலும் பரவாயில்லை என கடவுளை வேண்டுகிறார். ஒரு வழியாக நடந்து ராதிகா வீட்டு அருகில் வந்து விடுகிறார்.
வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து புதிய வீட்டிற்கு கிளம்பி தயாராக வெளியில் நிற்கின்றனர் ராதிகா, கோபி மற்றும் மயூ. இவர்களைப் பார்த்த கோபியின் அப்பா அவர்களிடம் போட்டோவை காண்பிக்க வேக வேகமாக நடக்க கீழே விழுந்து விடுகிறார். இதை கவனிக்காமல் கோபி ராதிகா ஆகியோர் காரில் கிளம்பி விடுகின்றனர்.
இந்தப் பக்கம் குடும்பத்தார் ஆளுக்கு ஒரு பக்கம் கோபியின் அப்பா வைத்த கடைசியில் பாக்கியாவும் செல்வியும் இந்த பக்கம் வர கோபியின் அப்பா கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்பி தண்ணீர் கொடுத்து எனக்கு போன் செய்து ஆட்டோவை வரவைத்து வீட்டிற்கு கூட்டிச் செல்கின்றனர்.
இவர்கள் ஆட்டோவில் கிளம்பியது என் வீடு அங்கிருக்கும் போட்டோவை எடுத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி எங்க போனீங்க எனது கண்கலங்கி அழுத வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்து வைக்கின்றனர். பிறகு எழில் தாத்தாவை அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு போட்டோவை எடுத்து கொண்டு சென்று அங்க யாரை பார்க்க போனீங்க என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


