தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி கிளம்புவதற்கு தயாராகி வந்து ஈஸ்வரி இடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க முடிவுல எந்த மாற்றமும் இல்லையா என்று கேட்க எதுவும் இல்லமா என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்துட்டு என்னால இருக்க முடியல நீ பத்திரமா இரு கோபி உனக்காக நான் டிபன் செஞ்சு வச்சிருக்கேன் சாப்பிட்டு போ இனிமே உனக்கு நான் எதுவும் செஞ்சு தர முடியாது அதுவே இல்லாம அடிக்கடி வந்துட்டு போ போன் பண்ணு என்றெல்லாம் பேச கோபி இனியாவை பார்க்க எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்ல நீங்க போயிட்டு வாங்க டாடி என்று சொல்லிவிடுகிறார்.
ஈஸ்வரி கோபி அழைத்துக் கொண்டு சாப்பிட உட்கார வைக்க கோபி சாப்பிடாமல் இருக்க ஈஸ்வரி ஊட்டி விடுகிறார். பிறகு கோபி சாப்பிட்டு முடிக்க அனைவரும் ஹாலில் வந்து உட்காருகின்றனர். ராதிகா பெட்டியை எடுத்துக்கொண்டு மையுவுடன் கீழே வர கிச்சனுக்கு சென்று பாக்யாவிடம் எங்களை இவ்வளவு நாள் இங்க தங்க வச்சதுக்கு நன்றி மயூ பாத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ் என்று சொல்ல பாக்யா தலையாட்டி விட்டு மயுவிடம் கட்டிப்பிடித்து நீ ரொம்ப நல்ல பொண்ணு நல்லா படிக்கணும் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
பிறகு செல்வியிடம் சொல்லிவிட்டு ஜெனி இடம் நீ பாக்யா நல்லா தான் பாத்துக்கிட்டாலும் சரியா சாப்பிட மாட்ற ஒழுங்கா சாப்பிடு செக்கப்புக்கு போ யாழினி பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு ஹாலுக்கு வருகிறார். கோபி ராதிகாவை பார்த்துவிட்டு நான் போய் என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைக்கிறேன் என்று எழ ஈஸ்வரி நீ உட்காரு கோபி என்று சொல்லி செழியனை எடுத்து வைக்க சொல்லுகிறார் உடனே ராதிகாவிடம் நீ முன்ன மாதிரி சண்டலாம் போடாத அவனுக்கு பழைய உடம்பு கிடையாது அவன பத்திரமா பாத்துக்கோ என்று சொல்லுகிறார். செழியனை திங்ஸ் எடுத்து வைக்க வேண்டாம் என்று ராதிகா சொல்ல ஈஸ்வரி என் அதையும் கோபியை தான் செய்யணுமா என்று கேட்கிறார். அதற்கு ராதிகா போறவங்களோட திங்ஸ் மட்டும் எடுத்தா போதும் இருக்குற உங்களோட திங்ஸ் எதுக்கு எடுக்கணும் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
உடனே கோபி நேத்து நைட்டு நம்ம எல்லாரும் ஒண்ணா போகணும்னு தானே முடிவு எடுத்தோம் அப்புறம் எதுக்கு இது மாதிரி எல்லாம் பேசிக்கிட்டு இருக்க ராதிகா என்று கேட்க இப்பதான் நான் தெளிவா பேசிகிட்டு இருக்கேன் நேத்து நீங்க ஒரு நிமிஷம் கூட தூங்கல இந்த வீட்ல இருக்கும்போது நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க அங்க இருக்கும்போது நீங்க ஒரு வாட்டி சிரிச்சீங்களா அதுவே பெரிய விஷயம்.
ஆனா இங்க நீங்க ரொம்ப சந்தோஷமா ஒரு குழந்தையாகவே மாறிடுறீங்க என்று பேசிக் கொண்டிருக்க அதெல்லாம் ஒன்னும் இல்ல ராதிகா நான் என்ன தயார் படுத்தி கிட்ட என்று சொல்ல உங்களால இவ்வளவு சந்தோசமா இருந்துட்டு அங்க வந்து என்னால கஷ்டப்பட வேண்டாம் உங்களால் சந்தோஷமா இருக்க முடியாது உங்க நிம்மதியே நான் ஏன் கெடுக்கணும் மயூவ நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு இனியாவிடம் உங்க அப்பாவ உங்க கூடவே விட்டுட்டு போறேன் என்று சொல்லுகிறார். நீங்க சொன்ன உடனே இந்த வீட்டுக்கு வந்ததுக்கு காரணம் நீங்க உடம்பு சரியில்லாம இருக்கீங்க உங்கள மனசு கஷ்டப்படுத்தக் கூடாது இரண்டாவது உடம்பு சரியில்லாத நேரத்துல உங்க கூட இருக்கணுன்னு ஆசைப்பட்டேன் என்று சொல்லுகிறார்.
செழியன் இடம் உங்க கூட இருக்கும்பொழுது உங்க அப்பா குழந்தையாவே மாறிடுராறு அத எப்பயும் மாத்திடாதீங்க அவரோட சந்தோஷம் எனக்கு முக்கியம் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரி இடம் வந்து இனிமே உங்க பையன உங்ககிட்ட இருந்து நான் பிரிச்சு கூட்டிட்டு போக மாட்ட உங்க பையனுக்கு நீங்களே சாப்பாடு சமைச்சு கொடுக்கலாம் ஊட்டி விடலாம் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் வாக்கிங் கூட்டிட்டு போகலாம் எதுக்குமே நான் கூட வர மாட்டேன் என்று சொல்ல ஈஸ்வரி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு பாக்கியாவிடம் சென்று நான் எடுத்திருக்கிற இந்த முடிவு உங்களுக்கு சாதகமா இருக்குமா இல்ல பாதகமா இருக்குமானு எனக்கு தெரியாது ஆனால் நீங்க ரொம்ப நல்லவங்க பாக்கியா உங்களோட நல்ல மனச நிறைய பேர் யூஸ் பண்ணிக்கிறாங்க அதை நானும் யூஸ் பண்ணிக்கிட்டேன்னு தோணுது இதுக்கு மேல திரும்பி திரும்பி வந்து இங்க நிக்க மாட்ட என்ன மன்னிச்சிடுங்க உங்களுக்கு நான் கெட்டது மட்டும் தான் பண்ணி இருக்கேன் ஆனா நீங்க எனக்கு நல்லது மட்டும் தான் பண்ணி இருக்கீங்க அது எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி என்று கையெழுத்து கும்பிட பாக்யா கையை பிடிக்கிறார். மயூவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அந்த நேரம் பார்த்து போன் வருகிறது.மயூ போனை கொடுக்க இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்து விடுவோம் என்று சொல்லி ம
போனை வைக்கிறார் ராதிகா.
கோபி என்ன கேட்கிறார்? அதற்கு ராதிகாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
