உங்கள கொன்னுடுவேன்.. கோபிக்கு வார்னிங் கொடுத்த எழில்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் ரெசார்ட்டிலிருந்து வீட்டுக்கு வந்த எழில் கோபியை பார்த்த அதிர்ச்சியில் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

இந்த பக்கம் ராதிகா வீட்டின் வெளியே அவருடைய முன்னாள் கணவர் காத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் இவர்கள் காரில் வந்து இறங்க மயூ முதலில் உள்ளே செல்கிறார். அவருடைய அப்பாவை பார்த்து பயந்து ஓடி வந்து விடுகிறார். பிறகு ராதிகா இங்க எதுக்கு வந்த என அவருடன் வாக்குவாதம் செய்ய போறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்லிட்டு போறேன் நான் குடிகாரன் தான் கடங்காரன் தான் ஆனால் மோசமானவன் கிடையாது. என்னை சட்டியில் இருந்து தப்பிக்க தான் நினைச்சு நீ அடுப்பு குள்ளவே விழப் போற. இவன பத்தி உண்மை தெரியவரும் போது நீ தாங்க மாட்ட என கூறுகிறார். பிறகு கோபி அவரை மிரட்டி அனுப்பி வைத்து விடுகிறார்.

இனிமே நாம எங்க இருக்க வேண்டாம் எவ்வளவு சீக்கிரம் வீடு மாற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாறிவிடலாம். ஒவ்வொரு முறையும் அவர் வரும்போது மயூ ரொம்ப பயப்படுறா என சொல்ல சீக்கிரம் மாறிவிடலாம் அதுக்காகத்தான் சொன்னேன் என கோபி கூறுகிறார். பிறகு மய்யு அவர் எதுக்கு உங்கள மோசமானவர் என்று சொன்னார் என கேட்க அவர் மோசமானவர் அவர் எல்லாரையும் அப்படித்தானே சொல்கிறார் என சமாளிக்கிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த கோபி இனியாவை பார்த்து ட்ரிப் எப்படி போச்சு ஜாலியா என்ஜாய் பண்ணீங்களா எனக்கேட்க ஜாலியா இருந்துச்சு டாடி நீங்க இல்லாததுதான் வருத்தமா இருந்தது. சாரிடா அப்பாவுக்கு ஆபிஸ்ல நிறைய வேலை கிளைன்ட் மீட்டிங் இருந்தது அதை அவாய்ட் பண்ண முடியல என சொல்ல கோபமான எழில் மீட்டிங் எங்க நடந்தது ஆஃபீஸ்லயா என கேட்கிறார். கோபி ஆமாம் என பொய் மேல பொய் கூறுகிறார்.

பிறகு கோபி தலை வலிக்குது என ரூமுக்கு சென்று விடுகிறார். இனியாவது எடுத்து அவருக்கு ரூமுக்கு சென்று விடுகிறார். பாக்கியா அவர் ரொம்ப பாவம் டா எவ்வளவு வேலை பார்த்தாரு என வருத்தப்பட்ட நீ திருந்தவே மாட்ட அவர் உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்காரு எழில் கூறுகிறார். இவ்வளவு வேலை செய்யறயே ஒரு நாளாவது அக்கறையா ஏதாவது கேட்கிறாரா என கேட்க அவர் செய்கிற அளவுக்கு நான் செய்யல என பாக்கியா கூறுகிறார்.

அவர் உன்னை இப்படி நடத்துறதற்கு நீயும் ஒரு காரணம் தன் நீ திருந்தவே நீ மட்டும் வேற மாதிரி இருந்திருந்தா இந்நேரம் நான் விவாகரத்து வாங்கி கொடுத்து இருப்பேன் என சொல்ல பாக்கியா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழிலை திட்டுகிறார். பிறகு இதில் மேலே செல்ல இவ எதுக்கு சம்பந்தமே இல்லாமல் பேசுகிறான் என யோசிக்கிறார் பாக்கியா.

மேலே சென்ற ஏழு கோபியை நேருக்கு நேராகச் சென்று ரெசார்ட்டில் பார்த்ததை கூறுகிறார். வீட்ல எல்லார்கிட்டயும் மாட்டிக்க கூடாதுன்னு அவங்கள கூட்டிட்டு நீங்க ஓடுனதை நான் பார்த்தேன். இனியா எவ்வளவு வருத்தப்பட்ட தெரியுமா ஒவ்வொரு ரைடக் அப்புறம் உன் அப்பா இல்லையே என பீல் பண்ணா. அவகிட்ட எதுக்கு இப்படி பொய் சொல்லி ஏமாத்தறீங்க? எங்க அம்மா நீங்க தான் உலகம் நீங்க இந்த குடும்பத்தை விட்டு போக மாட்டீங்க அவருக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா என சொல்லிக்கிட்டு இருக்காங்க, உங்களுடைய நம்பிக்கைக்கு எப்படி உங்களால துரோகம் பண்ண முடியுது, நீ இப்படி எல்லாம் செய்யுறது தெரிஞ்சா பாட்டு என்ன ஆவாங்க. இதை பத்தி எதுவுமே உங்களுக்கு கவலை இல்ல உங்களுக்கு உங்க சந்தோஷம் தான் முக்கியம்.

என் பிரெண்ட்ஸ் எல்லாம் எங்க அப்பா இதை பண்ணாரு அதை பண்ணாருனு அவ்ளோ சந்தோஷமா சொல்லுவாங்க, ஆனா நான் உங்களை நினைச்சா மட்டும் ஏன் அவ்வளவு கோபம் கண்ணீர் வருத்தம் எல்லாம் வருது. ரெசார்ட்ல உங்களை பார்த்ததும் வீட்ல இருக்கவங்க எல்லாரையும் கூப்பிட்டு காமிக்க ஒரு நிமிஷம் ஆகியிருக்காது. அப்படி காட்டி இருந்தா அங்கேயே உங்க கதை முடிந்திருக்கும். ஆனா குடும்பம் கஷ்டப் பட்டத்தையும் குடும்பம் உடைகிறதை என்னால பார்க்க முடியாது.

நான் இதெல்லாம் வீட்ல போய் சொல்ல மாட்டேனு உங்களுக்கு நல்லாவே தெரியும். கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆனா இந்த விஷயங்கள் எல்லாருக்கும் ஒரு நாள் தெரிய வரும். அன்னைக்கு எல்லோரும் வருத்தப்படுவார்கள். அன்னைக்கும் பல பார்ப்பேன். எல்லாரையும் கஷ்டப்படுத்தி நீங்க மட்டும் சந்தோஷமாக இருக்க கூடாது, உங்கள கொன்னுடுவேன். சத்தியமா கொன்னுடுவேன் என முகத்துக்கு நேராக எச்சரிக்கை விடுகிறார். இதைக் கேட்ட கோபி பதில் சொல்ல முடியாமல் கதி கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் எழில் இதனை தன்னுடைய தாத்தாவிடம் சொல்லி அழுகிறார்.

Baakiyalakshmi Serial Episode Update 28.03.22
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

6 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

6 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

6 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago