Bharathi Kannamma Serial Episode Update 28.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அகிலன் அஞ்சலி மற்றும் அவருடைய அப்பா ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கார் சத்தம் கேட்டு ஹேமா வந்து விட்டார் எனக் கூறுகின்றனர். கூடவே லட்சுமியின் பேச்சுக் குரல் கேட்க இன்னொரு குழந்தையோட குரல் கேட்டது என அகிலன் அப்பா சொல்ல அஞ்சலி வேற யாரா இருக்கும் லட்சுமி தான் வந்திருப்பார் என கூறுகிறார். அதற்கேற்றார்போல இருவரும் உள்ளே வருவதைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷம் படுகின்றனர். பாரதியின் அப்பா என்னடா குட்டி திடீர்னு எங்க வந்துட்ட என கேட்க ஏன் தாத்தா வரக்கூடாதா என லட்சுமி கேட்கிறார். அதன் பிறகு நான் உங்களை எப்படி கூப்பிடட்டும் என கேட்க இவ்வளவு நாளா தாத்தா னு தான் கூப்பிடுற அப்படியே கூப்பிடு என சொல்கிறார். சரிங்க தாத்தா என சொல்கிறார். பிறகு அகிலாவிடம் உங்களை எப்படி கூப்பிடுவேன் என்று சொல்ல அங்கிள்னு சொல்கிறார். நல்லாவே இல்ல இனிமே நான் உங்கள ஹேமா மாதிரி சித்தப்பானு கூப்பிடுறேன் என சொல்ல அகிலன் ஓகே என்ன கூறுகிறார். அஞ்சலியை சித்தி என கூப்பிடுவதாக சொல்கிறார்.
மேலும் இனிமே நாங்க ஃப்ரண்ட்ஸ் இல்ல, அக்கா தங்கச்சி என லட்சுமி கூறுகிறார். இதுல யாரு அக்கா என கேட்க நான் அக்கா தங்கச்சி என லட்சுமி செல்கிறார். ஏன் அப்படி என்று கேட்க அது அப்படித்தான் என லட்சுமி சொல்கிறார். பிறகு பாரதி வந்ததும் ஹேமாவை தூக்கி கொஞ்ச நம்மளால இப்படி அப்பா கூட ஜாலியா இருக்க முடியல என லட்சுமி வருத்தப்படுகிறார்.
பிறகு ஹேமா டாடி டாடி என பாரதியை கூப்பிட்டுக் கொண்டே இருக்க இப்படி என்னால கூப்பிட முடியலையே என்று வருத்தப்படுகிறார். அதன்பிறகு லட்சுமி என்ன அமைதியா இருக்க என பாரதி கேட்க உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் அங்கிள் என சொல்கிறார். என்ன சொல்லி என்ன பாரதி கேட்க எனக்கு டாக்டர் அங்கிள் பிடிக்கல என கூறுகிறார். என்ன உனக்கு பிடிக்கலையா எனது பாரதி கேட்க உங்களை பிடிக்கும் டாக்டர் அங்கிள் கூப்பிட்டுறது பிடிக்கல, ஹேமா எங்க அம்மா சமைச்சு கொடுக்கறதுனால சமையல் அம்மான்னு கூப்பிடுறா, எனக்கு உடம்பு முடியலனா நீங்கதான் மருத்துவம் பார்க்கறீங்க, அதனால நான் உங்கள டாக்டர் அப்பான்னு கூப்பிடுறேன் என சொல்கிறார். பாரதி பதில் சொல்ல முடியாமல் திகைத்து நிற்க சூப்பரா இருக்கு என ஹேமா கூறுகிறார். இவ்வளவு நாளா உன் கண்ணு தானே கூப்பிட்டு இருந்த அப்படியே கூப்பிடு என சொல்ல இல்லை இனி நாங்க டாக்டர் அப்பான்னு தான் கூப்பிடுவோம் என ஹேமா கூறுகிறார். இருவரும் ஒன்றாக டாக்டர் அப்பா, டாக்டர் அப்பா என சொல்ல பாரதி சரி அப்படியே கூப்பிடுங்க என கூறுகிறார். அதன் பின்னர் இதையெல்லாம் மறைவில் நின்று பார்த்த சௌந்தர்யா மகிழ்ச்சியடைகிறார்.
இந்தப் பக்கம் வெண்பா பாரதி பற்றி யோசித்துக் கொண்டிருக்க அவருக்கு ஒரு போன் கால் வர அதிர்ச்சி அடைகிறார். யார் கிட்ட இருந்து போன் வரக்கூடாது என்று இருக்கேனோ அவங்க பண்றாங்க என புலம்புகிறார்.
பிறகு கண்ணம்மா சௌந்தர்யாவுக்கு போன் செய்து லட்சுமி பற்றி கேட்க பாரதியிடம் படித்துக் கொண்டு இருக்கிறார் என கூறுகிறார். அவளுடைய நடவடிக்கை சரியில்லை நான் டாக்டர் அங்கிள் வீட்டுக்கு போறேன்னு அடம்பிடிச்சு வந்திருக்கா. என்னை எதிர்த்து பேசுறா என கூறுகிறார். சௌந்தர்யா இங்கேயும் லட்சுமியோட நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்பவும் கூச்சத்தோடு இருக்க அவ இப்போ சகஜமாய் இருக்கா. பாரதி கிட்ட கூட உங்களை டாக்டர் அப்பானு கூப்பிட போறேன்னு சொன்னார் என சொல்ல ஏன் அப்படி சொல்லலாம் என கண்ணம்மா கேட்க அவ சரியாதான் சொல்லி இருக்கா என கூறுகிறார். வரட்டும் அவ அவளுக்கு இருக்கு என போனை வைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…