ஈஸ்வரி சொன்ன வார்த்தை,கோபி கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரியை ரைடுக்கு கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என சொல்லுகிறார் உடனே செல்வி அவங்க வரமாட்டாங்க இனியா பாப்பா அவங்களுக்கு பயம் என்று சொல்லி ஈஸ்வரியை உசுப்பேத்தி கேம் இல் விளையாட வைக்கிறார். அனைவரும் சந்தோஷமாக கேம் விளையாட ராதிகா பாக்யா மட்டும் எந்த ஒரு ரைட்டிலும் பங்கு கொள்ளாமல் இருக்கின்றனர். அந்த கேம் முடித்து வேறு ஒரு கேம் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுகின்றனர்.

பிறகு அனைவரும் சாப்பிட உட்கார செல்வி நம்ம ரெஸ்டாரண்ட்ல எல்லாமே கம்மி வில எவ்வளவு அதிகமா இருக்கு என்று சொல்ல பாக்கியா எடுத்துக்கேத்த மாதிரி எல்லா விலையும் இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி இதுல எனக்கு எதுவுமே புரியல என்று சொல்ல கோபி நான் ஆர்டர் பண்றேன் என்று சொல்லுகிறார் உடனே ராதிகா நானே எல்லாருக்கும் ஆர்டர் பண்றேன் என்று சொல்ல, எங்களுக்கெல்லாம் என்ன பிடிக்கும்னு தெரியுமா ஆர்டர் பண்ணி அப்புறம் எல்லாம் வேஸ்ட் ஆகவா என்று சொல்ல ராதிகா எல்லோருக்கும் சேர்த்து ஆர்டர் செய்கிறார் ராதிகா ஆர்டர் செய்தது எல்லோருக்கும் பிடித்ததால் அனைவரும் நன்றாக சாப்பிடுகின்றனர் ஆனால் ராதிகா எதையோ யோசித்துக் கொண்டு அனைவரும் சாப்பிடுவதையும் ரசித்துப் பார்க்கிறார் பாக்யா இதை கவனித்து என்னவென்று சைகையில் கேட்க ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். அனைவரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் வர அங்கு ரிங் தூக்கி போட்டு பொம்மை ஜெயிக்கும் போட்டி இருப்பதால் இனியா லவ் பேர்ட்ஸ் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அனைவரும் தூக்கிப் போட எழிலுக்கு ஒரு பொம்மை கிடைக்கிறது ஆனால் அதை இனியாவுடன் கொடுக்க எனக்கு அந்த லவ் பேர்ட்ஸ் தான் வேணும் இது வேண்டாம் என்று சொல்ல உனக்கு வேணாம்னா போனா மயூகிட்ட கொடுக்கிறேன் என்று சொல்லி மயூவிடம் கொடுக்க மயூ வாங்கிக் கொள்கிறார்.

சரி நானே போடுகிறேன் என்று இனியா தூக்கி போட ரிங்கு கீழே விழுகிறது இதனால் அப்செட் ஆன இனியா எனக்கு அந்த பொம்மை இல்லையா என்று கேட்க ராதிகா நா போட்டு தரேன் என்று சொல்லி கரெக்டாக அந்த பொம்மையின் மீது போட்டு இனியாவிற்கு வாங்கி கொடுக்கிறார் இதனால் இனியா சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். பாக்கியாவை விளையாட சொல்ல பாக்யா அடுத்த பலூன் கேம் இருக்கிறது நான் அது விளையாடுகிறேன் என்று அங்கு வருகின்றனர் பாக்யா மற்றும் மற்றவர்கள் சொல்லும் கலர் பலூனை கரெக்ட்டாக சூட அதனைப் பார்த்து கோபி இவ்வளவு திறமை பாக்யாவுக்கு எங்கம்மா வந்துச்சு என்று கேட்க அவ செவ்வாய் கிரகத்துக்கு போக சொன்னா கூட வண்டியிலேயே போயிட்டு வந்துருவா என்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். கொஞ்ச நேரம் கழித்து ஈஸ்வரி கோபியுடன் நடந்து வர குடும்பத்தினருடன் பாக்கியா வர திடீர்னு எதுக்குமா இந்த பிளான் என்று கேட்க இது முழுக்க ராதிகாவுடைய ஏற்பாடு இனியா அப்செட்டா இருக்கான்னு அவங்க இப்படி பண்ணியிருக்காங்க ஆனா இதுதான் உண்மையான காரணமா இருக்குமானு எனக்கு தெரியல இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு என்று யோசிக்கிறார் அவங்க ஏதோ பெரிய முடிவு ஒன்னு எடுத்து இருக்காங்க அதனால தான் என்று சொல்லுகிறார். ராதிகா மயூ மற்றும் இனியாவுடன் வர இனியாவை பார்த்து நல்லபடி நீயா டான்ஸ் விற்றாத அங்கு நடந்ததுக்கு சாரி என்று சொல்ல பரவால்ல விடுங்க என்று சொல்லுகிறார்.

அனைவரும் ஓரிடத்தில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க செல்வி இனியாவிடம் ஒரு டான்ஸ் ஆடு பாப்பா என்று சொல்ல இந்த இடத்தில் எப்படி ஆட முடியும் என்று சொல்ல ஈஸ்வரி அவ்ளோ பேரும் முன்னாடி ஆடுற இங்க ஆட கூடாதா என்று கேட்க சரியென சொல்லுகிறார் உடனே கோபி மயூ நீயும் போய் அக்கா கூட டான்ஸ் ஆடு என்று சொல்ல இனிய அக்கா பெரிய டான்சர் அவங்க கூட எல்லாம் என்னால ஆட முடியாது என்று சொல்ல இனியா வா மயு ஆடலாம் என்று கூப்பிட இரண்டு பேரும் டான்ஸ் ஆட அனைவரும் கைத்தட்டி விசில் அடித்து சந்தோஷப்படுகின்றன.
பிறகு அனைவரும் நின்று கொண்டிருக்க இனிய வாங்க பீச்சில் விளையாடலாம் என்று கூப்பிட விளையாட செல்கின்றனர். ஆனால் ராதிகா நடந்ததை எல்லாம் நினைத்துக் கொண்டு அமைதியாக நின்று விட்டு அவர்கள் பீச்சில் விளையாடுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார் இதனை கவனித்த பாக்கியா என்னாச்சு நீங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா என்று கேட்க நான் இதுவரைக்கும் இருக்க சந்தோஷத்தை விட இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லுகிறார்.

பிறகு அனைவரும் வீட்டுக்கு வர ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshmi serial episode update 28-01-25
jothika lakshu

Recent Posts

நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் வேப்பிலை..!

நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…

2 hours ago

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

9 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

10 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

10 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

12 hours ago