அமிர்தாவை தேடி அலையும் எழில். தாத்தாவால் கடுப்பான ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு ராதிகா சமையல் செய்து முடித்துவிட்டு எல்லோரையும் சாப்பிட கூப்பிட தாத்தா ராதிகா கூப்பிடுவது காதில் கேட்காதபடி கொண்டு இருக்க பிறகு கோபி வந்து கூப்பிட செல்கிறார்.

அதன் பிறகு ராதிகா சப்பாத்தி பரிமாற கோபி ஆஹா ஓஹோ என பாராட்ட அதைப் பார்த்த தாத்தா இது என்ன இவ்வளவு தடியா இருக்கு கையை கீழே விழுந்திடும் போல இருக்கு எனவும் இது என்ன குருமா உப்பு சப்பு ஒண்ணுமே இல்ல என நக்கல் அடிக்கிறார்.

அடுத்ததாக எழில் அமிர்தாவை தேடி தச்சம்பட்டி என்ற ஊருக்கு செல்கிறார். இரவு நேரம் ஆகிவிட்டதால் இப்போதைக்கு வீட்டுக்கு போக வேண்டாம் காலையில் தேடிப் பிடித்துக் கொள்ளலாம் என சொல்கிறார். அடுத்து பாக்யா போன் போட எழில் தான் தஞ்சாவூர் வந்திருக்கும் விஷயத்தை கூறுகிறார். பாக்கியா பத்திரமா இரு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி அமிர்தா வீட்டுக்குச் சென்று இதெல்லாம் செட்டாகாது என சொல்லிட்டு வந்ததாகவும் வர்ஷினி வீட்டுக்கு சென்று பெண் கேட்டதாகவும் விஷயத்தை சொல்ல முதலில் அதிர்ச்சியாகும் தாத்தா அதன் பிறகு சரியென சம்மதிக்கிறார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்யா மேலே இருந்து கீழே வர ஈஸ்வரி டக்கென்று பேச்சை நிறுத்தி பேச வேண்டாம் என ராமமூர்த்திக்கு சைகை கொடுக்கிறார். பாக்கியா வந்ததும் எப்போ வந்தீங்க மாமா எனக்கு கேட்க ஈஸ்வரி இப்பொழுது காபி போட்டு எடுத்து வந்து கொடு என அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் அமிர்தாவை தேடி அவருடைய அப்பா அம்மாவின் பெயரை சொல்லி தேடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 27-12-22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago