ஈஸ்வரி சொன்ன வார்த்தை, பாக்கியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அமிர்தாவிடம் ஜெனியை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கோ என்று சொல்லிக் கொண்டிருக்க அமிர்தா நான் ஜெனியை என்னைக்குமே ஹர்ட் பண்ண மாட்டேன் என்று சொல்கிறார். பிறகு எழிலும் அங்கு வந்துவிட என்ன மாமியார் மருமகள் மீட்டிங்கா என்று கேட்க பாக்யா ஆமா உனக்கு என்னடா என்று சொல்கிறார்.

பிறகு ரூமுக்கு சென்ற எழில் அமிர்தாவின் கையை பிடித்துக் கொண்டு தன்னுடைய ஆசை, கனவு குறித்து பேசுகிறார். நான் ஒரு நல்ல படத்தை டைரக்ட் பண்ணி விருது வாங்கணும் அந்த மேடையில அம்மாவை ஏத்தி அவங்களை சந்தோஷப்பட வைக்கணும். எனக்கு நல்ல அம்மா நல்ல மனைவி கிடைச்சிருகாங்க என்று சொல்லுகிறார்.

அதன் பிறகு ஈஸ்வரி எழுந்து வர கோபி சோபாவில் படுத்து இருந்த விஷயம் தெரிந்து நான் போய் கேட்கிறேன் என்று சொல்ல கோபி அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்று சொல்கிறார். பிறகு உங்களுக்கு நான் காபி போட்டு தரேன் என்று கோபி கிச்சனுக்கு போய் ஏதோ ஒன்றை கலக்கிக் கொண்டு வந்து கொடுக்க அதை ஈஸ்வரி குடித்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு நீ வாக்கிங் போ என்று அனுப்பி வைத்துவிட்டு காபியை கொண்டு போய் சிங்க்கில் ஊற்றி விடுகிறார்.

இதை ராதிகாவும் கமலாவும் பார்த்து விட ஈஸ்வரி என்ன பாக்குறீங்க தள்ளுங்க என்று சத்தம் போட்டுவிட்டு ராமமூர்த்தியை பார்க்க வருகிறார். பார்க்கில் பாக்யா ராமமூர்த்தி என இருவரும் பாட்டி வந்து கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி வர பாக்கியா நீங்க பேசிட்டு இருந்த நான் வந்துடுறேன் என்று அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி கோபி வீட்டில் நடப்பது எல்லாம் சொல்லி புலம்புகிறார். எனக்கு செத்துப் போச்சு என்று சொல்ல அப்படின்னு கிளம்பி வந்துட வேண்டியதுதானே என்று ராமமூர்த்தி சொன்னதும் ஈஸ்வரி அப்படியெல்லாம் வரமுடியாது அந்த கமலாவை வீட்டை விட்டு வெளியே துரத்தனும் அப்போதான் நான் அங்கிருந்து வருவேன் என்று சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி அங்கிருந்து கிளம்பியது பாக்யாவிடம் ராமமூர்த்தி அவளுக்கு சாப்பாடு சரியில்லை, அதுதான் புலம்பிட்டு போறா என்று சொல்ல பாக்கியா ஈஸ்வரியிடம் சென்று நான் வேணும்னா உங்களுக்கு தினமும் சாப்பாடு கொண்டு வந்து தரவா என்று கேட்கிறார். நான் ஒன்னும் தெருவுல இல்ல என் புள்ள வீட்ல இருக்கேன் என்று ஈஸ்வரி கோபப்பட்டு விட்டு சென்று விடுகிறார்.

அடுத்து பாக்கியா ரெஸ்டாரன்ட்டில் இருக்கு பக்கத்துக் கடை ஓனர் வந்து வாட்டர் மெலன் ஜூஸ் குடித்து விட்டு பார் திறப்பு விழாவுக்காக பத்திரிக்கை வைத்துவிட்டு செல்கிறார். கடையில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பார் வந்தா சரிப்பட்டு வராது எங்க வீட்ல வேலைக்கு கூட அனுப்ப மாட்டாங்க என்று சொல்ல பாக்கியா அதெல்லாம் எதுவும் நடக்காது பாத்துக்கலாம் என்று சமாதானம் செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 27-05-24
jothika lakshu

Recent Posts

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

8 hours ago

Bison – Poison ? Ameer Speech Bison Thanks Meet

https://youtu.be/hvOcBNB9q5M?t=1

10 hours ago

Mari Selvaraj Speech Bison Thanks Meet

https://youtu.be/V8EF1lKofzs?t=1

10 hours ago

Pa Ranjith Speech Bison Thanks Meet

https://youtu.be/XH3vQluc4Eo?t=518

10 hours ago

Aaru Arivu Movie Audio Launch | Ambedkar | Thol Thirumavalavan

https://youtu.be/VRvtIfqauzI?t=7

10 hours ago

பைசன் : 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

11 hours ago