தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி விட அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். இனியா கல்யாணத்த கிராண்டா பண்ணனும் என்று கோபி சொல்ல, ஈஸ்வரி அதுவரைக்கும் நான் இருக்க மாட்டேன் நல்லா பண்ணிடு என்று சொல்ல,கோபி நீங்க இனியாவோட குழந்தை கல்யாண வரைக்கும் இருப்பீங்க என்று சொல்லுகின்றனர். அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மறுபக்கம் கிச்சனில் பாக்யா செல்வி மற்றும் ஜெனி மூவரும் பேசிக்கொண்டிருக்க ஜெனி பாக்யாவிடம் இனியாவோட ஸ்டேட்டஸ் பார்த்தீர்களா என்று கேட்கிறார். பாக்கியா போன் எங்க இருக்குன்னு தெரியல என்று சொல்ல, போட்டோக்களை ஜெனி காண்பிக்கிறார் அதில் ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு ஊட்டுவது போல் இருப்பதை பார்த்து பாக்யா டென்ஷன் ஆகிறார்.
இவங்க பண்ற அலம்பல் தாங்க முடியல கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பையனே இல்லைன்னு தல முழுகுறாங்க இந்த இனியாவும், செழியன் அவர் பண்ணது எல்லாம் தப்புன்னு சொன்னாங்க ஆனா இப்ப அப்படியே தலைகீழா மாறி இது மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க கொஞ்சம் கூட ஒரு பொறுப்பே இல்லாம லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்த பசங்க மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காரு ராதிகாவை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல அவங்க இவரை பார்க்க வந்து இவங்க கிட்ட அசிங்கப்பட்டு தான் போறாங்க அவங்கள பார்க்க கூட இவங்க விட மாட்டாங்க மயு பாவம் ஹாஸ்பிடல்ல இருந்து அவரைப் பார்க்கிறதுக்காக உள்ள வரவே பயப்படுற என்றெல்லாம் சொல்லி பேச செல்வி நீ எதுக்கு ராதிகாக்காக பாவம் பார்த்துகிட்டு இருக்க, அவங்க உன் வாழ்க்கையை பறிச்சிட்டு போனவங்க தானே என்று சொல்லுகிறார் இங்கே யாரும் யாரோட வாழ்க்கையும் பறிக்கல என்று பேசிக் கொண்டிருக்கின்றன.
மறுபக்கம் ராதிகா வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு வைத்திருக்க ராதிகாவின் அம்மாவிடம் நீ எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டியா என்று ராதிகா கேட்க வெச்சிட்டேன் என்று சொல்லுங்க பிறகு கண்டிப்பான வீடு காலி பண்ணி தான் ஆகணுமா என்று கேட்கிறார் உடனே ராதிகா எதுவும் பேசாமல் போனை எடுத்து அதில் இனியா வைத்திருக்கும் போட்டோவை காட்ட ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார் இவர்கள் எல்லாம் என்ன மனுஷனே தெரியல என்று கடுப்பாகி திட்ட ராதிகா நான் இங்கே இன்னும் சாப்பிடாம இருக்க ஆனா அவர் அம்மாவுக்கு இதை ஊட்டி விட்டு சாப்பிட்டுவிட்டு சந்தோஷமா இருக்காரு என்று சொல்ல ராதிகாவின் அம்மா இவரோட மூஞ்சில இவ்வளவு சிரிப்பு நான் பார்த்ததே இல்ல ரெண்டு மாசம் வரைக்கும் எங்க அம்மா தான் என்னுடைய எதிரி என்று சொல்லாதே அதுக்கு அப்புறம் அவங்க கொல்லி போட விடல இப்போ போய் ஒன்னு சேர்ந்துகிட்டு கூத்தடிச்சுக்கிட்டு இருக்காரு என்று சொல்லுகிறார். அப்ப கூட நீ வீட்டை விட்டு போக கூடாது ராதிகா மாப்பிள்ளை விட்டுக் கொடுத்துட்டு ஏன் போகணும்? இங்கேயே இருக்கணும் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி நம்ம மாப்பிள்ளையே இங்க கூட்டிட்டு வந்துடலாம் என்று சொல்ல எதுவும் வேண்டாம் இவ்வளவு நாள் வீட்டுக்கு காலி பண்ணதெல்லாம் அவருக்காக நான் எனக்காக பண்ற இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக இருக்கிறார்.
மறுநாள் காலையில் கோவிலில் கோபியின் பேரில் அர்ச்சனை செய்துவிட்டு ஈஸ்வரி கோபி இடம் உனக்கு அது மாதிரி ஆணதும் என்ன எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு கோபி எங்க நீயும் என்னை விட்டுட்டு போயிடுவியோனு நான் பயந்துட்டேன் என்றெல்லாம் பேசுகிறார்.
நீ எங்க கூட தான் இருக்கணும் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது நான் உங்க அப்பா கிட்ட போய் சேர்ர வரைக்கும் நீ என் கூட தான் இருக்கணும் என்றெல்லாம் பேசுகிறார். உடனே கோபி உங்கள விட்டு நான் எங்கம்மா போக போறேன் என்று சொல்ல நீ சொல்ற வார்த்தை கேட்க நல்லா தான் இருக்கு ஆனா அப்படி நடக்காது இல்ல என்று சொல்லுகிறார்..
அப்படியெல்லாம் இல்லம்மா நான் உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டேன் என்று சொல்ல ஈஸ்வரி அழுது கோபியிடம் சத்தியம் கேட்கிறார். இனியா மற்றும் செழியன் இருவரும் நீங்க இங்க இருக்கிறது தான் பா நல்லா இருக்கு நீங்க இல்லன்னா நல்லாவே இல்ல பாட்டி தான் சத்தியம் கேட்கிறாங்க இல்ல பண்ணுங்க என்று சொல்லுகின்றனர். கோபி சத்தியம் செய்கிறாரா? பாக்யா என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய பார்த்து தெரிந்து கொள்வோம்.
