செழியன் வீட்டுக்கு வந்த மாலினி. கோபிக்கு பாக்கியா கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மாலினி செழியனுக்கு போன் செய்ய செழியன் போனை அட்டென்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்க பாக்கியா அங்கு வந்து விட உடனடியாக போனை கட் செய்து முழிக்க பாக்கியா யாரு என்ன ஏது என்று விசாரிக்க ஆஃபீஸ் கால் என்று சொல்லி சமாளிக்கிறார். அந்த மாலினி தானே ஏதாச்சும் சொல்லி மிரட்டுறாளா? என்ன ஏது என்று கேட்க அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என கூறி உள்ளே சென்று விடுகிறார்.

அடுத்ததாக கோபி வாக்கிங் செல்ல எல்லோரும் என்ன ஹார்ட் அட்டாக்கா என்று விசாரிக்க அதெல்லாம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த வழியாக பாக்கியா வர சாருக்கு ஹார்ட் அட்டாக் நீங்க கேட்க மாட்டீங்களா என்று கேட்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும் நான் என்ன கார்டியாலிஸ்ட்டா என்று பதிலடி கொடுத்து பாக்கியா அங்கிருந்து நகர்கிறார்.

பிறகு கோபி வீட்டுக்கு வர கிரெடிட் கார்ட் பணம் கேட்டு பேங்கில் இருந்து வந்து அதிர்ச்சி கொடுக்க கோபி ஒரு மாசம் டைம் கேட்டுக் கொண்டிருக்க பாக்யா வந்துவிட அவர்களிடம் வேறு எதையோ பேசி சமாளித்து பாக்கியா உள்ளே சென்றதும் அவர்களை பேசி அனுப்பி வைக்கிறார்.

பிறகு ராதிகா எதிரில் வந்து நிற்க கோபி ஹாய் பேபி எப்படி இருக்க என்று பேசி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய ஈஸ்வரி அங்கே வந்து வா கோபி என வீட்டுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் மாலினி செழியன் குறித்து கேட்க ஜெனி முக்கியமான விஷயமா வெளியே போய் இருப்பதாக சொல்கிறார்.

நான் போன் பண்ணா பத்து நிமிஷத்துல இங்க இருப்பான் என்று சொல்லி மாலினி போன் போட சொன்னது போலவே செழியன் பதறி அடித்து ஓடி வர எல்லோரும் ஷாக்காகின்றனர். அடுத்ததாக மாலினி ஜெனியிடம் குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள எல்லோரும் ரூமுக்கு சென்று விடுகின்றனர்.

செழியன் ஆபீஸ் கால் பேசப்போன நேரத்தில் மாலினி குழந்தையை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட பிறகு ஜெனி வந்து குழந்தையைக் கேட்க செல்வி அக்கா வாங்கிட்டு போய்ட்டாங்க என்று பொய் சொல்ல செல்வி சத்தியமா என்கிட்ட குடுக்கல என்று சொல்கிறார். கடைசியில் எல்லோரும் குழந்தையை காணவில்லை என்று பதற்றம் அடைந்து தேடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 25-10-23
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

14 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

14 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

14 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

14 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

15 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

18 hours ago