ஜெனி இனியாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. இனியாவை பளார் என அறைந்த பாக்கியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் தாத்தா கூட அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது கோபி கீழே வர அவரை பார்த்ததும் கோபப்படுகிறார் அவருடைய அப்பா. இதனால் கோபி மேலே எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு எழில் இன்னைக்கு ரெக்கார்டிங் இருக்கு அமிர்தா ஒரு பாட்டு பாட போறாங்க‌. நீங்களும் வாங்க என சொல்லி தன்னுடைய பாட்டி மற்றும் தாத்தாவை அழைத்துக்கொண்டு ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு செல்கிறார். அமிர்தாவை எழில் பாடச்சொல்லி உள்ளே அனுப்ப அவர் இரண்டு முறை முயற்சி செய்தும் பயத்தில் பாட முடியாமல் தவிக்கிறார்.

பிறகு அமிர்தாவை வெளியே கூட்டி வந்த எழில் அவரை அமைதிப்படுத்தினார். உங்களால பாடமுடியும் பயப்படாதீங்க என கூறுகிறார். இன்னைக்கு பாட வேண்டாம் இன்னொரு நாள் பாடலாம் ஆனால் இந்த பாட்டை நீங்கதான் பாடணும் என உறுதியாக சொல்கிறார். பிறகு தாத்தா பாட்டி அமிர்தாவுடன் பீச்சுக்கு செல்கிறார் எழில்.

அங்கு எழில் உட்பட அவருடைய தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் அமிர்தாவிடம் உன்னால் பாட முடியும் என நம்பிக்கை கொடுக்கின்றனர்.‌ பிறகு அவருடைய தாத்தா அமிர்தாவை ஒரு பாட்டு பாடு சொல்ல அவரும் பாரதியார் பாட்டை பாடி அசத்துகிறார்.

இந்த பக்கம் பாக்கியா சமைக்கும் இடத்தில் கையில் சூடு வைத்துக் கொண்டு தலைவலியோடு தவிக்கிறார். பிறகு எழிலுக்கு போன் செய்து வீட்டுக்கு வந்துட்டீங்களா என கேட்க இல்ல நாங்க பீச்சுல இருக்கோம் என்ன சொல்கிறார். வீட்டுக்கு வந்ததும் போன் பண்ணு நான் வந்துவிடுகிறேன் என பாக்கியா சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.

இந்த பக்கம் இனியா வழக்கம்போல் தயாராகி பிசியோதெரபிஸ்ட் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த ஜெனி இடம் பிசியோதெரபிஸ்ட் நீங்க வர வேணாம்னு சொல்லிட்டீங்களா என கேட்க நான் எதுவும் சொல்லல என கூறுகிறார். பிசியோதெரபிஸ்ட் வர நேரத்துக்கு தாத்தாவை ஏன் வெளியே கூட்டிட்டு போகணும் என சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் எழில் தாத்தாவை வீட்டிற்கு கூட்டி வருகிறார்.

பிறகு எழில் வெளியே கிளம்பி விடுகிறார். ‌‌ அதன் பின்னர் பிசியோதெரபிஸ்ட் வந்ததும் ஓடிச் சென்று அவருடைய பேக்கை வாங்கி வருகிறார் இனியா. கூடவே நின்று அவருடன் தொடர்ந்து பேச்சு கொடுக்கிறார். மேலும் அவரை போட்டோ எடுக்க முயற்சி செய்ய இதனை பார்த்து ஜெனி போனை புடுங்கி கொள்கிறார்.

பிறகு பிசியோதெரபிஸ்ட் கிளம்பியதும் நீ எதுக்கு தேவையில்லாம டாக்டர் கிட்ட பேசிட்டு இருக்க என கேட்க நீங்களும்தான் பேசறீங்க என ஜெனியை திருப்பி கேள்வி கேட்கிறார் இனியா. அவரவர் வேலையை செய்ய போறாரு உனக்கு இங்கே என்ன வேலை நீ எதுக்கு வர என எனக் கேட்க நீங்களும் தான் வந்து நிற்கறீங்க என பதிலுக்கு பதில் பேசுகிறார். தேவையில்லாம எதுக்கு ஒருத்தர் கிட்ட பேசணும் அவங்ககிட்ட வழியனும் என ஜெனி கூறுகிறார். எதுக்கு அவர இம்பிரஸ் பண்ண முயற்சி பண்ற என கேட்க நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க என கூறுகிறார்.

நாளையிலிருந்து நீ பிசியோதெரபிஸ்ட் வரும் போது கீழே வரக்கூடாது, வரவேண்டாம் என ஜெனி சொல்ல அதை சொல்ல நீங்க யாரு? நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நீங்க ஒன்னும் எனக்கு சொல்லத் தேவையில்லை என கூறுகிறார். இந்த நேரத்தில் பாக்கியா வந்து இனியாவை அதட்ட என்ன அண்ணிகிட்ட இப்படி தான் பேசுவியா எனக் கேட்க ஆமா பெரிய அண்ணி, அவங்க வேலைய மட்டும் பார்க்க சொல்லு என சொல்ல பளாரென அறைகிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Baakiyalakshmi Serial Episode Update 24.02.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago