Baakiyalakshmi Serial Episode Update 22.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபி சாப்பிட உட்கார்ந்த போது இனி பிஸ்னஸ் எல்லாம் பண்ண வேண்டாம் என ஆரம்பிக்க ஈஸ்வரி இவ மேல என்ன தப்பு இருக்கு என கூறுகிறார். பாக்கியா சமையல் செய்ய அதனால்தான் இவ்வளவு பிரச்சனை. நீ பிஸினஸ் தொடங்கியதில் இருந்து பிரச்சனைதான் நிம்மதியா இந்த வீட்ல இருக்க முடியுதா.? பசங்களுக்கு எவ்வளவு கஷ்டம் எவ்வளவு டென்ஷன் இனிமே நீ பிசினஸ் பண்ண வேண்டாம். பிசினஸ் பண்றேன் நீ வீட்டை விட்டு வெளியே போன நடக்கிறதே வேற அவ்வளவுதான் சொல்லிட்டேன் என சத்தம் போட்டு விட்டு மேலே சென்று விடுகிறார். ஈஸ்வரி அமைய ஏதோ கோபத்துல பேசிட்டு போறான் அப்புறம் பேசிக்கலாம் என சொல்கிறார்.
இந்த பக்கம் எழில் ஆபீஸ்ல இருக்கும்போது அந்த அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். நடந்த விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஜானு உள்ளே வந்து விட அவரை பேசிட்டு இருக்கும்போது கதவைத் தட்டாமல் உள்ளே வாரிங்க மேன்னஸ் இல்லையா எனத் திட்டுகிறார். பதிலுக்கு ஜானுவும் நமிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட எழில் இருவரையும் கொஞ்சம் சும்மா இருங்க என சமாதானம் செய்கிறார்.
இந்த பக்கம் ஜெனி கோவிலுக்கு சென்றுவிட்டு அங்கு ராதிகாவை பார்த்து பாக்கியா வருத்தப்பட்டது பற்றி சொல்கிறார். நீங்க உங்கள தப்பா நினைச்சுட்டீங்க அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இந்த பிசினஸ் தொடங்கவே ராதிகா தான் காரணம் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க சொல்ல நான் அவங்க கிட்ட பேசுறேன் இணையும் ராதிகா கூறுகிறார்.
பிறகு கோபி சொன்ன விஷயத்தைக் கேட்டு வீட்டில் செழியன், இனியா என இருவரும் பிஸினஸ் வேண்டாம் என கூறுகின்றனர். பிறகு எழில் வர அவரிடம் செல்வி இந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய பாக்யா தடுத்து விடுகிறார். எவ்வளவு கேட்டும் நான் நல்லாத்தான் இருக்கேன் என சொல்கிறார். பிறகு ஜெனி இந்த விஷயத்தை சொல்ல அம்மாவிடம் சென்று அப்பா உன்னை பிசினஸ் பண்ண வேண்டாம்னு சொன்னாரா என கேட்கிறார்.
அவர் எதுக்கு இத உங்கிட்ட சொல்லணும்? உனக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அவராவது உதவி பண்றார்? அப்புறம் எதுக்கு அவர் எது சொன்னாலும் யார் என்ன சொன்னாலும் நான் பிசினஸ் பண்ணுவேன்னு நீ ஒத்த காலுல நில்லு. பிசினஸ் பண்றது எவ்வளவு பெரிய விஷயம் என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் சமைக்கும் இடத்திற்கு பக்கத்தில் உள்ளவர்கள் இடத்தை காலி பண்ணுமாறு கூறுகின்றனர். பாக்கியாவிடம் வேலை செய்பவர்கள் வேலைக்கு வரவில்லை என சொல்கின்றனர்.
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது…
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற…
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…